மன்னனுக்கு அருகில் நெற்றியில் பிறைநிலா திலகம் தரித்து முறுக்கிய மீசையுடனும் தோள்வரை வளர்ந்த கருமையான கார்குழலுடனும் பட்டாடை உடுத்தி இடுப்புக்கச்சையில் வாளுடன் கம்பீரமாகவும் மிடுக்குடனும் நின்றிருந்தான் விஷ்ணு.
அப்போது அரசவையில் மாமன்னர் ராஜசிம்மன் வாழ்க !வாழ்க ! சேனாதிபதி விஷ்ணுவர்மர் வாழ்க வாழ்க என்ற வாழ்த்தொலிகள் எழுந்து விண்ணை எட்டின.
அப்போது சிங்காதனத்தில் அமர்ந்திருந்த ராஜசிம்மன் அவையோரினைப்பார்த்து புன்னகையுடன் கையமர்த்தினார். தன் அருகில் கம்பீரத்துடன் நின்றிருந்த விஷ்ணுவைப் பார்த்து " விஷ்ணுவர்மா..... நாம் அடைந்த இந்த மாபெரும் வெற்றிக்கு காரணகர்த்தாவே நீதான். படைத்தளபதியாக பொறுப்பேற்ற மிகக் குறுகிய நாளிலேயே உன்னுடைய வீரத்தால் என் கருத்தைக் கவர்ந்து விட்டாய். இப்பொழுதோ நம்மை விட பல மடங்கு படைகளையும் படைவீரர்களையும் கொண்ட எதிரி நாட்டு படையை உன் வீரத்தாலும் புத்திகூர்மையினாலும் சிதறடித்து ஓடவிட்டு என் மனதில் உனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி விட்டாய்." என தன் ஆண்மை ததும்பும் குரலில் ராஜ மிடுக்கு சற்றும் குறையாமல் கூறினார்.
இப்பொழுதுதான் நம் நிகழ்கால விஷ்ணுவிற்க்கு சிங்காதனத்தில் அமர்ந்திருந்தவரின் முகம் மங்களான காட்சியிலிருந்து சிறிது சிறிதாக தெளிவான காட்சியாக மாறிக்கொண்டே வந்தது.
ராஜசிம்மன் .....பெயருக்கு தகுந்தார் போலவே கம்பீரமாக ராஜகளையுடனும் காட்சியளித்தார். கிட்டதட்ட அவருக்கு 30 அகவைக்கு மேல் இருக்காது.
ராஜசிம்மன் பேசியதை கேட்ட அக்கால விஷ்ணுவர்மன் புன்னகை புரிந்தவாறே இல்லை அரசே இந்த வெற்றிக்கு நான் மட்டுமே காரணம் இல்லை. என் தனி ஒருவனால் இந்த வெற்றியை நிகழ்த்தியிருக்க முடியாது. இந்த வெற்றிக்கு காரணம் நம் படை வீர்களும் ,அவர்களை மனதைரியத்துடன் போர்க்களத்திற்க்கு அனுப்பிய அவர்களின் குடும்பத்தினரும் , எல்லாம் வல்ல அந்த இறைவனும் தான் காரணம் " என தன்னை மட்டுமே அரசர் புகழ்வதை கேட்க விரும்பாமல் தன் வெற்றிக்கு காரணமானவர்களையும் சபையின் முன்னே வைத்தான் விஷ்ணுவர்மன்.
YOU ARE READING
அது மட்டும் ரகசியம்
Mystery / Thrillerகதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....