19

1.4K 87 122
                                    

அந்த  மோதிரத்தைப்பற்றி  ராம் கூறக் கூற வெளிச்சக்கீற்று பளீரென சிந்தையில் உதயமாக ஆரம்பித்தது நம் விஷ்ணுவிற்கு . அப்பொழுது தான் ராமின் அன்னை கௌரி நேரமாகும் பொருட்டு அவனை அழைக்க வந்தார் . " தம்பி ... இன்னும் நேரமாகிறது தெரியலையா ? நல்ல நேரத்துக்குள்ள போனாதான் பூஜை பண்ண முடியும் . அப்பா எப்பவோ ரெடியாகி கீழ வெய்ட் பண்ணிட்டு இருக்காரு . இங்க வந்து பார்த்தா ரெண்டு பேரும் சாவகாசமா பேசிட்டு இருக்கீங்க ... எல்லா கதையும் வந்து பேசிக்கலாம் கிளம்புங்க தம்பிங்களா".  என அவசர அவசரளாக அங்கு பேசிக்கொண்டிருந்த ராமையும் விஷ்ணுவையும் துரிதப்படுத்தினார் . 

" இதோ கிளம்பிட்டோம்மா... அப்பா ரெடியாகிட்டாருன்னு முதல்லயே சொல்லிருக்க கூடாதா ... ஜீவா , பாலா , வேதா எல்லாரும் கிளம்பிட்டாங்களா ?" 

" உங்களைத் தவிர எல்லாரும் ரெடிடா... இப்ப வர மாதிரி ஐடியா இருக்கா ... இல்ல இப்படியே கேள்வி கேட்டுட்டு இருக்கறதா உத்தேசமா ? " சற்று சலித்தபடி கௌரி கூறவும் " உடனே கோபம் வந்துடும் என் ராஜமாதாவுக்கு " என அவரின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சியபடி அவனது அறையிலிருந்து புறப்பட்டான் ராம் . ராமினைத் தொடர்ந்து விஷ்ணுவும் ராம் கொடுத்த வேட்டி சட்டையை அணிந்துக்கொண்டு  அவ்விடமிருந்து அகன்றான். 

கூடத்திலே கௌரி கூறியபடியே அனைவரும் கோவிலுக்கு செல்வதற்கு தயாராக இருந்தனர் . மாடிப்படியிலிருந்து இறங்கும் போதே விஷ்ணுவின் முகத்தில் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்த ஜீவா அவன் அருகில் விஷ்ணு வரவும் "என்ன விஷ்ணு இன்னைக்கு முகம் ஏதோ பளிச்சுன்னு பிரகாசமா இருக்குற மாதிரி இருக்கு… ராமோட ரூம்ல இருந்து வரியே ஏதாவது கண்டுபிடிச்சியாடா?"  என ஆர்வம் மேலிட வினவினான் ஜீவா.

"ஹ்ம்ம்… ஆமா ஜீவா… ரொம்பப் பெரிய விஷயம் தான். முதல்ல கோவிலுக்கு போகலாம் டைம் ஆகிடுச்சு கோவிலுக்கு போய்க்கிட்டே இதைப் பத்தி பேசலாம் எனக் கூறியபடி அவனை அங்கிருந்து கூட்டிச்சென்றான் விஷ்ணு

அது மட்டும் ரகசியம்Donde viven las historias. Descúbrelo ahora