விஷ்ணுவர்மனை தேடி அலைந்த வீரர்கள் அந்த இடத்திலிருந்து சென்றதும் மறைவிலிருந்து வெளிவந்த விஷ்ணுவர்மன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீவிரமாக சிந்திக்கலானான் .
விஷ்ணுவர்மனின் கவனம் முழுவதும் அந்த மரகதலிங்கம் எங்கே உள்ளது என்பதையும் தன் மீது சுமத்தப்பட்ட பழியை எவ்விதம் போக்குவது என்பதையும் சிந்தித்தவண்ணமே இருந்தது . தன்னை அரண்மனை வீரர்கள் தேடிக்கொண்டிருப்பதால் முதலில் ஒரு பாதுகாப்பான அடைக்கலத்தினை தேடவேண்டும் என அவன் எண்ணினான் .
தான் அடைக்கலம் புக தக்க இடம் அருகில் இருக்கும் குன்றும் அடர்ந்த காடுகளும்தான் என்பதை உணர்ந்த விஷ்ணுவர்மன் அந்த கானகத்தை நோக்கி தன் பிராயாணத்தைத் துவங்கினான் . அக்காட்டில் பொதுவாகவே ஜனநடமாட்டம் என்பது கிடையாதாகையால் அங்கு இருப்பதே உசிதம் என முடிவெடுத்தான் .
மேலும் வீரர்களும் அந்தப்பக்கமாக தனது தேடுதல் வேட்டையை முடித்துக்கொண்டதால் இனி அந்தப்பக்கம் வரமாட்டார்கள் என்றும் நினைத்தான் .
அந்தக் கானகம் ஏற்கனவே அவனுக்கு பழக்கப்பட்ட இடமாதலால் அந்தக்காட்டின் இயல்பு அவன் அறிந்த ஒன்றுதான் . வானளாவி இருந்த மரங்களும் அந்த மரங்களின் அடர்ந்தகிளைகளும் சூரிய வெளிச்சத்தின் பரிட்சையத்தையே அந்த கானகத்திற்கு கிட்டக்கூடாது என்று சங்கல்பம் எடுத்தாற்போன்று வளர்ந்திருந்தன .
அவ்வப்போது செவிப்பறையில் வந்து விழுந்த இனம்தெரியாத பட்சிகளின் ஓசையும் பூச்சிகளின் ஓசையும் சற்று அச்சுறுத்தும்படியாக இருந்தது .
அந்த கானகத்தில் தனக்கான ஒரு இடத்தினை தெரிவுசெய்து அமர்ந்து ஆழ்ந்த பெருமூச்சைவிட்டான் . தலையை நன்றாக அருகில் இருந்த மரத்தின் மீது சாய்த்துக்கொண்டு சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டான் . பிறகு எங்கிருந்து தனது துப்பறியும் வேலையை ஆரம்பிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தான் . முதலில் தனக்கு எதிராக சாட்சியளித்த கோவில் காவலனைப்பார்த்து அவனிடம் இருந்துதான் வேலையை ஆரம்பிக்கவேண்டும் என நினைத்தவன் இருள் கவிழும் நேரம் ஊருக்குள் செல்லலாம் என யோசித்தான் .

أنت تقرأ
அது மட்டும் ரகசியம்
غموض / إثارةகதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....