20

1.2K 68 60
                                    

ஈஷ்வரபாண்டியனை பின்தொடருமாறு தன் மனம் சொன்னதை  உடனே செயல்படுத்த துவங்கினான் விஷ்ணு . ஜீவாவிடம் ஒரு வார்த்தை கூறிவிட்டு செல்லலாம் என மனம் நினைத்தாலும் அவனை எந்த வம்பிலும் சிக்க வைக்க விஷ்ணுவின் மூளை இடம் தரவில்லை. ஆகவே விஷ்ணு  மட்டுமே ஈஷ்வரபாண்டியன் கவனியாவண்ணம் அவரைப்பின் தொடர்ந்தான். அவரின் வாகனம் புறப்பட்டவுடன் ஷெட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ராமின் இருசக்கரவாகனத்தில் செல்வது என முடிவெடுத்து அதைச் செயல்படுத்தினான் . 

ஈஷ்வரபாண்டியனின் கார் பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்தது . அவ்வளவாக ஆள்நடமாட்டமும் வாகனங்களும் இல்லாவிடினும் ஓரளவிற்க்கு போக்குவரத்து நிகழ்ந்துகொண்டுதான் இருந்தது . 

அடுத்த இருபது நிமிட நேர பிராயாணத்தில் அவரது வாகனம் முக்கியபாட்டையிலிருந்து சற்று விலகி ஜனசஞ்சாரமற்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தது . இந்த பகுதியில் மிகவும் நெருக்கத்தில் அவரைப்பின்தொடர்ந்தால் அவர் தன்னைக் கண்டுபிடித்துவிடக்கூடும் என அவதானித்தவன் சற்று கணிசமான இடைவெளியிலேயே அவரைக் கண்காணித்துக்கொண்டு வந்தான் . சிந்தை முழுக்கவும் எண்ண அலைகள் ஆர்ப்பரிக்க தன் பணியை தொடர்ந்தான் விஷ்ணு . 

சிறிது நேரத்தில் ஈஷ்வரபாண்டியனது வாகனம் ஒரு ஒதுக்குபுறப் பகுதியில் தன் பிரயாணத்தை நிறுத்தியது . அதிலிருந்து இறங்கிய ஈஷ்வரபாண்டியன் சுற்றும் முற்றும் தன் பார்வையை செலுத்திவிட்டு பின் கிழக்குத்திசையை நோக்கி நடக்கலானார் . சற்றுதூரம் சென்றதும் கானகப்பிரதேசம் தென்பட்டது . சற்றும் யோசிக்காமல் அதனுள் தன்னைப்புகுத்திக்கொண்டு மேலும் தன்பிராயணத்தைத் தொடர்ந்தார். அடுத்த ஐந்து நிமிடங்களில் சிறியதும் அல்லாமல் பெரியதும் அல்லாமல் ஒரு நடுத்தரவர்க்கமான சற்றே சிதிலமடைந்த கட்டடம் தென்பட்டது . அந்த கட்டிடத்தை நெருங்கிய ஈஷ்வரபாண்டியன் உட்பக்கமாக தாளிடப்பட்டிருந்த கதவினருகில் சென்றவர் கதவினை லேசாகத்தட்டினார் . 

அது மட்டும் ரகசியம்Место, где живут истории. Откройте их для себя