ராம் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த விஷ்ணுவும் ஜீவாவும் அவன் அகன்றவுடன் ஒருவரை ஒருவர் பொருள் பொதிந்த பார்வையை பரிமாறிக்கொண்டனர் .
சாப்பிட்டு முடித்தவுடன் விஷ்ணு அவனது அறைக்குள் சென்றான் . விடையூருக்கு வந்த நாள் முதல் அவனது மனத்தினில் சஞ்சலங்களும் குழப்பங்களும் மட்டுமே வியாபித்திருந்த நிலையில் அந்த மோதிரம் ராமினுடையது என்று தெரிய வந்த வேளையில் இருந்து ஏதோ இனம் புரியாத வேதனை மனதை காயப்படுத்திக்கொண்டிருந்தது .
எள்ளளவும் ராமினை சந்தேகப்பட விஷ்ணுவின் மனமும் சரி அறிவும் சரி தடை சட்டத்தை அமல்படுத்திக்கொண்டிருந்தன.
அப்போது விஷ்ணுவின் அறைக்குள் அவனைப் பார்க்க ஜீவா வந்தான். இவ்வளவு பெரிய சம்பவங்கள் விஷ்ணுவைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும்போது விஷ்ணுவைத் தனியாக விடுவது உசிதமானது அல்ல என்று எண்ணினான் ஜீவா.
“ என்ன விஷ்ணு என்ற பண்ற என்ன யோசிச்சிட்டிருக்க ????" என்ற ஜீவாவின் கேள்வியில் சிந்தனை கலைந்து திரும்பிப்பார்த்தான் விஷ்ணு . அங்கே அறை வாயிலில் இவனையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான் ஜீவா.
“ வேற என்ன ஜீவா யோசிக்க இருக்கு ? அதே கதை அதே பல்லவி …. அந்த மோதிரம் எப்படிடா ராமோடதா இருக்க முடியும் ? அவன் ஏன் மரகதலிங்கத்தை திருடனும் ? சீரியஸ்லி ….. ஐ ஆம் கெட்டிங் டயர்ட்….ஐயம் டன் வித் திஸ் மேட்டர்டா “ விஷ்ணுவின் குரலின் தொனியே அவனுடைய வேதனையை பட்டவர்த்தனமாக ஒலிபரப்பியது .
“ விஷ்ணு …. கவலைப்படாதடா…. எல்லா பிரச்சனைக்கும் கண்டிப்பா ஒரு சொல்யூஷன் இருக்கும் .சொல்யூஷன் இல்லாத பிரச்சனை இந்த உலகத்துலயே எதுவும் இல்லை . பூட்டை உருவாக்கியவன் அதுக்கான சாவியை செய்யாமலா போய்டுவான் .என்ன ஒன்னு அந்த சாவிக்கான தேடுதல் வேட்டைல இப்ப நாம இருக்கோம். சாவி கிடைச்ச உடனே பூட்டைத் திறந்திடலாம்" என்றவன் மேலும் " இந்த ப்ராப்ளம் சீக்கிரமே சரியாகிடும் பாரு… அதையே நினைச்சு விட்டத்தைப் பார்த்திட்டிருந்தா எப்படி விஷ்ணு… நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்கேன்ல… டோன்ட் வொர்ரி மச்சி “ என்று கூறி ஆறுதலாக விஷ்ணுவின் தோளில் கைவைத்தான் ஜீவா.

ВЫ ЧИТАЕТЕ
அது மட்டும் ரகசியம்
Детектив / Триллерகதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....