காலையில் பொண்ணு பாக்க வராங்க வீட்ல எல்லாரும் ஆர்வத்தோடு வேலை பார்த்துட்டு இருந்தாங்க.
காலையில் பொண்ணு பார்க்க எல்லாரும் வீட்டுக்கு வந்தாங்க.
அவங்களுக்கு ரோஸியை பார்த்தவுடனே ரொம்ப பிடிச்சு போயிடுச்சு.
அவங்க வசதியை பார்க்கல பொண்ணு அழகா இருக்கு. அதனால இந்த பொண்ணு ஓகேன்னு சொல்லிட்டாங்க...
மாப்பிள்ளை வெளிநாட்டில் இருக்கிறார் ஆனால் மாப்பிள்ளை போட்டோவை பார்த்ததுமே
ரோஸி வீட்டிலேயும் எல்லோருக்கும் மாப்பிள்ளையயும் மாப்பிள்ளை வீட்டார்களையும் ரொம்ப பிடிச்சு போயிடுச்சு...
ரோஸி வீட்டுலயும் ரோஸிய கல்யாணம் பண்ணி தரேன்னு ஓகே சொல்லிட்டாங்க.
இருவரும் இரு வீட்டிலும் கலந்துபேசி ஒரு வாரத்திலேயே நிச்சயதார்த்தமும் பண்ணிட்டாங்கமாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்தாலும். மாப்பிள்ளைட்ட போன் பேச சொல்லி மாப்பிள்ளை அக்காக்கள் ரோஸியிடம் கூறினார்.
ரோஸியோ வெக்கப்பட்டுக் கொண்டு நான் பேச மாட்டேன்னு சொல்லிட்டா.
அப்புறம் ரோஸியோட அப்பா அம்மாகிட்ட சொல்லி. இரண்டு பேரையும் பேச வைக்க சொன்னாங்க.
ரோஸியோட அப்பா தர்ஷன் மாப்பிள்ளைக்கு போன் அடுத்தார்...
ரித்துஷ் வேலையில பிஸியா இருந்துட்டு இருந்தான்.
அவன் போனை எடுத்து பேசவே இல்ல..
சிறிது நேரம் வெயிட் பண்ணி பாத்துட்டு தர்ஷன் வெளியில வேலைக்கு போயிட்டாரு...
தர்ஷன் வேலைக்கு போய் கொஞ்ச நேரத்துல ரித்தீஷ் ரோஸி வீட்டுக்கு போன் அடித்தான்.
போனை எடுத்து பேசுவதற்கு ஆள் இல்லை.
வீட்டில் ரித்துவும் ரோஸியும் மட்டும்தான் இருந்தார்கள்.உடனே ரித்து போனை எடுத்து நான் பொண்ணோட தங்கச்சி பேசுறேன். நல்லா இருக்கீங்களா என்று கேட்டாள்..
ВИ ЧИТАЄТЕ
**"எனக்கென யாரும் இல்லையே"** ***(முடிவுற்றது.)***
Сучасна прозаReal story படித்துப் பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். இது ஒரு உண்மைக் காதலின் போராட்ட கதை.