பத்திரிக்கை அடிச்சாச்சு ரோஸி யோட அம்மாவும் அப்பாவும் கல்யாண அழைப்புக்காக பத்திரிக்கை வைக்க கிளம்பினார்கள்.
ரோஸியோட அம்மா ரோஸி இந்த போன் நீ மாப்பிள்ளை கிட்ட போன் அடுத்து பேசு என்று போனை கொடுத்துட்டு இருவரும் சென்று விட்டார்கள்..
ரித்து ஸ்கூல்லுக்கு சென்றுவிட்டாள்..
ரித்தீஷ்க்கு போன் அடிக்க பயந்து கொண்டு யோசித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தாள் ரோஸி..
சரி ரித்தீஷ்ட்ட பேசித்தான் பார்ப்போமே என்று ரித்திஷ்க்கு போன் அடித்தால்.
ஒரு மிஸ் கால் போன உடனே ரித்தீஸ் ரோஸிக்கு போனை அடித்தான்..hi ரோஸி நல்லா இருக்கீங்களா...
ம்ம் இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா.
என்ன பண்றீங்க எனக்கு ரொம்ப ஆச்சரியமா தாங்க முடியல ரோஸி...
ஏன்
நீங்க போன் அடிச்சிருக்கிங்க. நீங்க என்கிட்ட பேசவே மாட்டீங்களா.. என்ன திடீர்னு மிஸ் கால் எல்லாம் கொடுக்குறீங்க...
இல்ல வீட்டில் யாரும் இல்லை. அதான் பேசலாம்னு..
ஆமா நீங்க இப்ப duty ல இல்லையா.. சும்மா தான் இருக்கீங்களா இப்ப..இல்லையே வேலை தான் பாத்துட்டு இருக்கேன். ஏன் கேட்க்குரிங்க ரோஸி.
இல்ல மிஸ்ட் கால் கொடுத்து அடுத்த செகண்டே உடனே போன் அடிச்சிங்கலே அதான் கேட்டேன்.
உங்கிட்ட பேசுவதைவிட எனக்கு வேற என்ன வேலை இருக்க முடியும் ரோஸி அதனாலதான் உடனே அடிச்சேன்.
ஓ அப்படியா சரி...
ஆமா ஏன் நீங்க என்னை வாங்க போங்கன்னு கூப்பிடுறீங்க ரோஸி வா போ னே கூப்பிடுங்க.இல்ல எனக்கு உங்களை அப்படி கூப்பிட வரமாட்டேங்குது.
நான் கல்யாணத்துக்கு அப்புறம் வா போன கூப்பிடுறேன்.
இப்ப எனக்கு கூப்பிட ஒரு மாதிரி இருக்குது ரோஸி.
அதனால நான் வாங்க போங்கன்னு உங்கள கூப்பிடுறேன்.இல்ல நீங்க வாங்க போங்கன்னு கூப்பிடறது எனக்கு ரொம்ப தூரமா தெரியிற மாதிரி இருக்கு...
KAMU SEDANG MEMBACA
**"எனக்கென யாரும் இல்லையே"** ***(முடிவுற்றது.)***
Fiksi UmumReal story படித்துப் பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். இது ஒரு உண்மைக் காதலின் போராட்ட கதை.