இப்பதான் கதை உள்ளார ரியல் ஹீரோ வரப்போறாரு..
ஹீரோ பேரு ரித்தீஷ்..
ரித்துஷுக்கு மூன்று அக்கா.
அம்மா இருக்காங்க.
அப்பா கிடையாது.எல்லாம் பெரிய ஃபேமிலி ஒரே குடும்பமா வாழ்ந்துட்டு இருந்தாங்க.
ரோஸி ஆசையும் பெரிய குடும்பத்தில் வாக்கபடணும்னு தான்.
அவங்க வீட்ல சொல்லிக்கிட்டே இருப்பா ரோஸி...அம்மா எனக்கு கல்யாணம் பண்ணுற குடும்பம்.
என் மாமியார் வீடு பெரிய familyயா இருக்கணும்மா.. அப்படி தான் எனக்கு மாப்பிள்ளை வீடு பாருஇந்த காலத்துல எல்லாம்.
ஏதுடி பெரிய குடும்பம்.மூணு பேரு நாலு பேருக்கு மேல எங்கடி ஒன்னா இருக்காங்க. ஒரு வீட்ல..
அதெல்லாம் எனக்கு தெரியாது மா எனக்கு பார்க்கிற பேமிலி பெரிய குடும்பமா தான் இருக்கணும் ப்ளீஸ்மா என்று அடிக்கடி ரோஸி சொல்லிக்கிட்டே இருப்பா...
அவ ஆசைப்பட்ட மாதிரியே பெரிய குடும்பமாக இருந்தது. இப்ப வர போர வரன்..
இதுக்கு முன்னாடி ரோஸியை நிறைய பேர் பொண்ணு பாத்துட்டு போயிருக்காங்க.
ஆனால் ரோஸி வீட்டு மாப்பிள்ளை பிடிக்காது.
இல்லை ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.அதனால் ரோஸிக்கு பார்க்கிற மாப்பிள்ளை எல்லாம் தட்டி தட்டி போய்கிட்டே இருக்கும்..
ரித்தீஷ் வீட்டில் இருந்து
பொண்ணு பார்க்க வர்றதுக்கு இரண்டு நாளைக்கு முன்னாடிரோஸி ஊரின் பக்கத்து ஊரிலிருந்து இரண்டே பையன் முதல் பையனுக்கு பொண்ணு கேட்டு வந்து இருந்தாங்க.
அந்த குடும்பமும் ரோஸி வீட்டுக்கு எல்லாருக்கும் பிடித்திருந்தது.
ஆனால் அது சிறிய குடும்பம்தான்..
இரண்டு நாளில் ரித்திஷ் வீட்டிலிருந்து வரேன்னு சொல்லிருக்காங்க ஆனால் இது பெரிய குடும்பமாக இருந்தது...
VOCÊ ESTÁ LENDO
**"எனக்கென யாரும் இல்லையே"** ***(முடிவுற்றது.)***
Ficção GeralReal story படித்துப் பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். இது ஒரு உண்மைக் காதலின் போராட்ட கதை.