ரோஸிக்கு ஒன்றும் புரியவில்லை.
ஏன் இப்படி எல்லாம் பேசுறான். ரோகன்.
இதற்கு முன்னாடி என்னை இந்த மாதிரி பேசினதில்லையே.
மூணு மாசம் வரைக்கும் நாங்க நல்லா பேசிகிட்டு இருந்தோம்.
எங்களுக்குள் எந்த பிரச்சினையும் வந்ததில்லை.
இப்ப என்னன்னா சந்தேகம் படுற மாதிரி பேசுறானே.
எனக்கு ஓன்னும் புரியலையே. சரி அவன்ட்ட என்னனு கேட்போம் என்று அழுதுகொண்டே மறுபடியும் மறுபடியும் திரும்பத் திரும்ப ரோகனுக்கு போன் அடித்துக்கொண்டே இருந்தாள்.
ரோகன் போனை ஆன் செய்யவே இல்லை switch offலேயே இருந்தது.
மறுநாள் வரையும் phone அடித்தாள் ரோஸி.
மறுநாள் மதியம் ரோஸி மறுபடியும் ரோகனுக்கு போன் அடித்தாள்.
ரிங் போனது ஆனால் ரோகன் போனை அட்டென்ட் செய்யவே இல்லை.76 மிஸ்கால் அடித்தும் அவன் அவள் போனை எடுக்கவே இல்லை. ரோஸிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ரோகனுக்கு மெசேஜ் அனுப்பினாள் ரோஸி.
"📱📲நான் உங்களுக்கு என்ன செஞ்சேன். உங்களுக்கு பிடிக்காத விஷயம் என்னைக்கும் செய்யமாட்டேன்.
என்றைக்குமே என்ட்ட பேசாமல் இருக்காதிங்க ரோகன்.
இப்படித்தான் இருக்கணும் எனக்கு அது பிடிக்காது இது பிடிக்காதுன்னு சொல்லுங்க நான் அப்படி இருக்கேன்.
அப்புறம் ஏன் நீங்க போன எடுக்க மாட்டேங்கறீங்க.
நான் எதாவது தப்பு செஞ்சதா நினைச்சீங்கன்னா தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க ரோகன்.
உங்களை கெஞ்சி கேட்கிறேன் என்னை மன்னிச்சுக்குங்க
ஆனா என்கிட்ட பேசாமல் மட்டும் இருக்காதிங்க என் போனை எடுங்க ரொம்ப கெஞ்சி கேட்க்குறேன். ப்ளீஸ்.என்று மெசேஜ் அனுப்பினாள் ரோஸி யாரிடமும் சொல்லவும் முடியல
உடனே அவள் தங்கை ரித்து வந்தாள் ஏன் ரோஸி அழுவுற என்னாச்சு என்று கேட்டாள்.

STAI LEGGENDO
**"எனக்கென யாரும் இல்லையே"** ***(முடிவுற்றது.)***
Narrativa generaleReal story படித்துப் பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். இது ஒரு உண்மைக் காதலின் போராட்ட கதை.