மறுநாள் விடிந்ததும் ஐசுவிற்கு மனசு கேட்கவில்லை.
ரோஸியை தேடி வீட்டிற்கு வந்தாள்...ஆனால் ரோஸியோ அவளிடம் எதுவும் பேசவே இல்லை.
அழுதுகொண்டே இருந்தாள் ரோஸி...ரோஸி அம்மாவிற்கு ரோஸியின் மேல் ஏதோ சந்தேகம் வந்தது...
இவள்
எப்ப பார்த்தாலும் அழுதுகிட்டே இருக்கா என்று ஐசுவிடம் போய்...
ஐசு ரோஸி இப்ப கொஞ்ச நாட்களாவே அழுதுகிட்டே இருக்கா...என்னன்னு கேட்டா ஒன்னும் இல்லனு சொல்லுறா...
நீ என்னன்னு ரோஸிட்ட கேளு அவன் என்கிட்ட எதையோ மறைக்கிறாள்.... ஆனால் உன்னிடம் இதுவரையும் அவ எதையும் மறச்சதும் இல்லை...
கோபப்பட்டதும் இல்லை...நீ என்னென்னு கேளு என்று ரோஸியிடம் பேச சொல்லி ஐசுவை அனுப்பிவிட்டு ரோஸி அம்மா வெளியில் போனாங்க.....
ரோஸி ப்ளீஸ்டி என்கிட்ட சண்ட வேணாலும் போடு என்ன வேணாலும் திட்டு ஆனால் என்கிட்ட பேசாம மட்டும் இருக்காத டி ப்ளீஸ்...
வேண்டாம் ஐசு நீ எப்ப என் காதல சந்தேகப்பட்டு தப்பா அடுத்தவங்க சொன்னாங்கன்னு பேசுனியோ
இனிமேல் கண்டிப்பா நமக்குள்ள எந்த நட்பும் நிலைக்காது...
நீ போய்டு ஐஸ்வர்யாஇல்ல ரோஸி நான் என்ன தப்பா சொன்னேன்னு..
நீ நினைக்கிற அப்படி உனக்கு என் மேல கோபம் இருந்தா நீ இங்க வா உன் போன ஒரு நிமிஷம் என்கிட்ட குடு நான் உனக்கு இப்போ எல்லாத்தையும் ப்ரூவ் பண்ணி காட்டுறேன்...என்ன சொல்லுற ஐஸ்வர்யா
ஆமா ரோஸி உன் போனை குடு
ரோஸி போனை வாங்கி ஐஸ்வர்யா கௌசிக்கிற்கு போன் அடித்தாள்....
கௌசிக் போனை எடுத்து ஐசுவிடம் பேசிக்கொண்டிருந்தான்.
அப்பொழுது ஐசு பட்டென்று கௌசிக் நான் உங்கள லவ் பண்றேன்.
எனக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்லிவிட்டாள்...கௌசிகுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது...
இப்பொழுது நான் உங்கள்ட ஒண்ணு கேக்குறேன் கௌசிக் நீங்க என்கிட்ட எதையும் மறைக்காம பொய் சொல்லாம எனக்கு பதில் சொல்லுங்க....

ESTÁS LEYENDO
**"எனக்கென யாரும் இல்லையே"** ***(முடிவுற்றது.)***
Ficción GeneralReal story படித்துப் பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். இது ஒரு உண்மைக் காதலின் போராட்ட கதை.