அதற்கு அப்பறம் ரோஸி இப்படி ஒரு பையனையா லவ் பண்ணிணோம்...
அப்போ எல்லாரும் சொன்னதுதான் உண்மை.
நம்மதான் முழுசா நம்பிட்டோம்.
அடுத்தவங்க எல்லாருமே எவ்வளதோ சொன்னாங்க.
நான்தான் எதையும் நம்ப மாட்டேன்னு சொன்னேன்.ஒன்னா ரெண்டா எத்தனை பேரை காதலித்து இருக்கான்.
அப்ப எல்லாரையுமே அவன் தேவைக்காக மட்டுமே யூஸ் பண்ணிருக்கான்.இப்படிப்பட்ட ஒரு பையனயா நம்ம லவ் பண்ணிருக்கேன்னு நினச்சா மனசு ரொம்ப வேதனையா இருக்கு...
என்று அழுவ ஆரம்பித்தாள் ரோஸி...
அதற்கப்புறம் ரோகனுக்கு போன் அடிக்கவே இல்லை.
ரோகன் ஒருநாள் போன் அடுத்து ரோஸியிடம் பேசினான்...
நீ இப்ப எதுக்கு போன் அடிச்ச..நான் தான் உன்கிட்ட சொன்னேன்ல தயவு செஞ்சு இனிமே என்கிட்ட நீ பேசாத...
உனக்கும் எனக்கும் ஒன்னும் கிடையாது ரோகன்
நீ இன்னும் மாறவே இல்லையா ரோஸி.
ரோஸி நீ நல்லா யோசிச்சு பாரு நான் சொன்னது எல்லாமே உனக்கு புரியும்..
இப்பயும் ஒன்னு கெட்டு போவல நீ உட்கார்ந்து பொறுமையா யோசிச்சு சொல்லு ரோஸி...
நம்ம கடைசி வரையும் நம் உறவை continue பண்ணிட்டே இருக்கலாம்..
இதோ இப்ப சொல்ற பாத்தியா இந்த ஒரு விஷயத்துக்காக மட்டும் தான் உன்னை நான் வேணாம்னு முடிவு பண்ணனேன்...
உன்னை காதலிச்சத்துக்கு நான் இப்ப வெட்கப்படுகிறேன்.. ரோகன்
போதும் ஒரு பொய்யான காதல்.
இதுக்கு மேல என்னால எதையும் தாங்க உடம்பில் தெம்பும் இல்ல..
என் மனதுக்கு தாங்கும் வலிமையும் இல்ல.
போதும் இதோட விட்டுடு ரோகன்.
நீ யார வேணாலும் லவ் பண்ணிக்கோ எப்படி வேணாலும் இருந்துக்கோ.நீ நினைக்கிற மாதிரி பொண்ணு நான் கிடையாது.
இன்னும் எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரையும் ஏமாற்று...
VOUS LISEZ
**"எனக்கென யாரும் இல்லையே"** ***(முடிவுற்றது.)***
Fiction généraleReal story படித்துப் பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். இது ஒரு உண்மைக் காதலின் போராட்ட கதை.