பகுதி 11

100 6 0
                                    

ரோஸியின் அப்பா ஊருக்கு வருவதற்காக leave  கேட்க்க சென்றார்.

ஆனால் அவருக்கோ இன்னும் இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் லீவு தருவேன் என்று கம்பெனியில் சொல்லிவிட்டார்கள்...

அதனால் அவருக்கு உடனே ஊருக்கு கிளம்பி வர முடியவில்லை..

நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது நான்கு நாட்களாகியும் ரோஸிக்கு மயக்கம் தெளியவில்லை.. மறுநாள் தான் மயக்கத்திலிருந்து எழ ஆரம்பித்தாள்.

ரோஸி அவள் அம்மாவிடம் பேசவே இல்லை.
ரோஸி அம்மா ரோஸியிடம் பேச்சுக் கொடுத்தாலும் ரோஸி அவள் அம்மா மீது கோபமாகவே இருந்து கொண்டிருந்தாள்..

மோனிஷா ரோஸியிடம் எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சி செய்தார்.

ஆனால் ரோஸியோ அவள் அம்மா சொன்ன அனைத்து விஷயங்களையும் மனதில் வைத்துக்கொண்டு ரொம்ப கோபமாகவும் பேசாமலும் இருந்து கொண்டிருந்தாள்..

ரோகனுக்கு இந்த செய்தி  தெரியவந்தது..

ரோகன்  ரோஸிக்கு போன் அடித்தான்..
உனக்கு என்ன ஆச்சு ரோஸி.
ஏன் இப்படி எல்லாம் செஞ்ச...
எதனால நீ இதெல்லாம் பண்ணுன என்று கேட்டான் ரோகன்...

அதுவா ரோகன்  இங்கே எல்லாரும் நினைச்சுகிட்டு இருக்காங்க.
நான் எங்க அம்மா கிட்ட சண்டை போட்டுட்டுத்தான் இப்படி எல்லாம் செய்தேன்னு...
ஆனால் அது உண்மை கிடையாது...
நீ வர வர என்கிட்ட சரியா பேச மாட்டேங்குர..
நான் போன் அடிச்சா எடுக்க மாட்டேங்கற..
என் சூழ்நிலை புரியாம என்கிட்ட எப்ப பாத்தாலும் சண்டை போடுற..

அதற்காகத்தான் ரோகன் நான் இந்த முடிவு எடுத்தேன்.
இதோட மட்டுமில்ல நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா மட்டும்தான் நான் உயிரோடு இருப்பேன்.

நீ எங்க என்னைய  வேணான்னு விட்டுட்டு போயிடுவியோன்னு பயத்தில்தான் நான் சாகனும்னு முடிவெடுத்தேன்...



நான் இப்பயும் கேக்குறேன் ரோகன்..
எந்த சூழ்நிலையிலயும் எந்த காரணத்துக்காகவும். என்னை நீ கைவிடமாட்டிங்கல்ல ரோகன்...




**"எனக்கென யாரும்  இல்லையே"**   ***(முடிவுற்றது.)***Tempat cerita menjadi hidup. Temukan sekarang