"""ரோஸிக்கு விக்கி வெளிநாடு செல்லும் பொழுது சொன்ன வார்த்தை ஞாபகம் வந்தது.
நீ என்னைக்கும் நல்ல பெயர் எடுக்கணும் ரோஸினு
சொல்லிட்டு போயிருந்தான் விக்கி.,,,"""அப்பாவும் மோசமானவர் அவர்மேலயும் பயமா இருக்கு.
அம்மாவும் எனக்கு சப்போர்ட் பண்ண முடியாது.
நமக்காக சப்போர்ட் பண்ணுனா அடி வாங்கும் அப்பாட்ட.
ஏன் கொலையே கூட நடக்கலாம்.என்ன பண்றதுன்னு புரியல ரோஸிக்கு.
ரித்து மட்டும்தான் இருக்கா
அவகிட்ட சொல்லவும் பயமா இருக்கு.
என்ன பண்ணலாம்னு ஒரே குழப்பத்தில் இருந்தால் ரோஸி.ஒரு வாரம் கழித்து ரோஸி ஒரு முடிவு எடுத்தாள்.
ரோஸி ரோகனுக்கு போன் அடித்தால்.
ரோகன் எதனால என்னை உங்களுக்கு புடிச்சிச்சின்னு நான் தெரிஞ்சுக்கலாமா ரோகன்....என்னன்னு எல்லாம் தெரியல ரோஸி உங்கள பார்த்தா அன்னைக்கே first timea எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருந்தது ரோஸி.
அப்ப நீங்க யாரு என்னன்னு கூட எனக்கு தெரியாது.
ஆனா இப்ப நீங்க யாருன்னு தெரியுது.
ஆனா எனக்கு சொல்ல பயமா இருந்தது.
இருந்தாலும் என் மனசுல எதையும் வெச்சுக்காம நான் உங்க கிட்ட சொல்லிட்டேன்.
இதுக்கு அப்புறம் உங்க முடிவு நீங்க தான் சொல்லணும்.அப்ப புவனா
நீங்க புவனாவ பத்தி கவலைப்படாதீங்க ரோஸி.
நான் அவள்ட்ட பேசிக்கிறேன் ஏன்னா அவ என் friend. நீங்க சொல்லுங்க ரோஸி உங்க முடிவு.
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்............மூணே மூணு வார்த்தை தான கேக்குறேன்.
நீங்க சொல்லுங்க ரோஸி
இந்த ஒருவாரமா
நான் உங்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்கல.
உங்களை எந்த டார்ச்சரும் பண்ணல.
ஆனால் இந்த ஒரு வாரத்தில் நீங்க என்னை நினைக்காமல் இருந்தீங்களா ரோஸி....இந்த ஒரு வாரத்தில் ஒரு நாளாவது நீங்க நிம்மதியா தூங்குனீங்களா ரோஸி ...
நீங்க இந்த ஒரு வாரத்துல எப்பொழுதும் போல சாப்பிட்டீங்களா ரோஸி ....
ŞİMDİ OKUDUĞUN
**"எனக்கென யாரும் இல்லையே"** ***(முடிவுற்றது.)***
Genel KurguReal story படித்துப் பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். இது ஒரு உண்மைக் காதலின் போராட்ட கதை.