சிற்பமும் அவள் சிற்பியும் அவள்
பல வருடங்களுக்கு முன்பு...
எந்த வருடம்???? அது ரகசியம்... ஆனால் பின்னால் வருடத்தின் விபரம் தரப்படும்."கவி, கவி உனக்கு எத்தனை தடவை சொல்வது, கூப்பிட்டதும் சாப்பிட வர முடியாதா?" - ஸ்வேதா, கவியின் அம்மா.
கவிக்கு தாயின் குரலைக் கேட்டதும் வியர்த்துக் கொட்டாத குறை. அம்மாவிடம் என்ன பொய் சொல்வது?
"நான் பிரேமிடம் ஒரு முத்தம் கேட்டேன்" என்று சொன்னால்? அடித்து துவைத்து விடுவாள்."அவன் எனக்குக் கொடுத்த முத்தம் என்னை பைத்தியமாக்கி அவன் சொன்னதையெல்லாம் செய்யச் சொன்னது" என்று சொன்னால்? இந்த ஜென்மம் முழுவதும் பேசமாட்டாள்.
மொட்டைமாடியில் அவள் புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டு இதயம் வேகமாக அடிக்க, படி இறங்கி கீழே முதல்தள வீட்டிற்குச் சென்றாள். அவள் கைபேசியில் அவன் எண்களை அழித்தாள். தாயின் கண் மறைவில் அவன் கொடுத்த கீரிட்டிங் கார்ட், ஐபாட் ஆகியவற்றை மெத்தையின் கீழ் ஒளித்து வைப்பது இமயம் ஏறுவதை விட சவாலான காரியம்.
அதையும் செய்து முடித்தாள் கவி.நான் கவி....
என் பெயர் கவி...
பிரேமின் கைகள் என்மேல் இருந்த கணமெல்லாம் என் பெண்மையை உணர்ந்தேன். அவனது உதடுகள்... ஆஹ்... அவனது கைகள்... ஆஆஹ்...
முதல் நாள் ஆறு முத்தங்களாக இருந்த முத்தக்கணக்கு மறுநாள் எட்டானது, அதன் மறுநாள் பத்தானது... அதன் மறுநாள் கணக்கில்லாமல் போனது. எனது தனிமை... பெற்றோர் என்னை நம்பிக் கொடுத்த தனிமை முழுதும் அவனுடன் என்றானது.இன்று...
September மாதம்...
2019...
"கவி.. நில்! உன்னை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாப்பில் விட்டுவிடுறேன். நீ ஏன் நடந்து போற?"- அகில்."சரி அகில் இன்றைய நாள்பொழுது எப்படிப்போச்சு? "- கவி.
"ரொம்ப நன்றாகத்தான்... ரொம்ப வேகமாகவும் போச்சு very very fast actually..."
"என்னப்பா அகில், உன் செல்போனுக்கு பாரத் மேட்ரிமோனியில் இருந்து ஸ்.எம்.ஸ் வந்திட்டே இருக்கு? உனக்கு பெண் பார்க்கும் படலம் தொடங்கியாச்சு போல?"
"எல்லாம் அம்மா வேலை கவி, ரொம்ப அவசரப்படுறாங்க."
(ஆசிரியர் குறிப்பு : இந்தக்கதையில் வரும் முகம் அறியா மனிதர்கள் யார் என்று கண்டிபிடிக்க முயலுங்கள். ரொம்ப பெரிய சஸ்பென்ஸ்லாம் இல்லைங்க)
