episode 15

70 11 1
                                    

கவிக்கு பயங்கர அதிர்ச்சி. அகிலின் நெடுநாள் கோபம் இப்போது புரிந்தது.
"சாரி அகில். நான் அப்படி உன்னை நினைத்திருக்கக்கூடாது. நீ அந்த மாதிரி கிடையாது!"

"ம்? அப்படியா? இப்போது எப்படி முடிவு செய்த?"

"நீ ஒரு நல்ல டாக்டர்! நல்ல டாக்டர்ஸ் ஜொல்லு விடுவதில்லை. எனக்குத் தெரியும்!"

"ஓ! நான் எப்படி நல்ல டாக்டர்னு சொல்ற?"
"கணபதி சார் விஷயத்தில் என் இதயத் துடிப்பு இரட்டிப்பானபோது என் கண்களைப் பார்த்தே அதை கண்டுபிடிச்சியே! அதான், நீ நல்ல டாக்டர்."
"தாங்க்ஸ் கவி!"

"அகில் கணபதி கேஸ் நடக்கும் போது.. என்னை control-ல வைக்க உதவியதற்கு ரொம்ப நன்றிப்பா.."

"ஓ உன் கையைப் பிடித்து தட்டிக் கொடுத்ததை சொல்கிறாயா? அச்சோ, கவி தப்பா நினைச்சிட்டியே.. நான் உன் பல்ஸ் எழுபத்தி இரண்டா? இல்லை எழுபத்திமூன்றா? என்றல்லவா செக் செய்தேன். ச்ச.. சரியா போச்சு போ! எல்லாமே தப்பு தப்பா தோணுது உனக்கு. நான் சில மெடிசன்ஸ் தரவா?" என்று கூறிக்கொண்டே பானட் பாக்கெட்டில் கையை விட்டான்.

பாக்கெட்டிலிருந்து சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி எடுத்து அவளிடம் கொடுத்தான். கவி அதில் அவள் முகத்தைப்பார்த்து சிரித்தாள்.

அகில் சொன்னான், "கவி இந்த டாப்ளட்டை எப்போதும் கூடவே வச்சிக்கோ.. நான் என் கூட எப்போதுமே வைச்சிருப்பேன்."
சிறிது நேரம் பேசிக்கொண்டருந்தார்கள். பிறகு கவி அகிலுடன் கிளம்பி தனது ஹாஸ்டலுக்குப் போனாள்.
இருவரும் பல விஷயங்களில் ஒத்துப் போனார்கள்.

கவியை விரும்பினாலும் "உன் சம்மதம் பெறும்வரை நான் நண்பனே" என்று அகில் மனதில் கூறிக்கொள்வான். இருவரும் நட்பு என்னும் வட்டத்திற்குள் நட்பைத் தவிர மற்றவற்றை எட்டிப்பார்க்ககூட விடுவதில்லை.
சில சமாச்சாரங்களை, நம் வீட்டின் அறைக்குள் அனுமதி மறுக்கப்பட்ட செருப்பைப்போல் வட்டத்தின் வெளியேதான் வைப்பார்கள்.
******

சிற்பமும் அவள் சிற்பியும் அவள்Where stories live. Discover now