episode 6

68 11 2
                                    

கவிக்கு பாடம் சொல்லிக் கொடுத்தபோது..
ஸ்வேதா கத்தினாள். கவிக்கு பாடம் சொல்லிக் கொடுத்தபோது கோபத்தை அடக்க ஸ்வேதா இரண்டு முறை காபி குடித்தாள், மூன்று முறை ஒன்றிலிருந்து பத்துவரை எண்ணினாள், அப்படிக் குறைந்த கோபம் மீண்டும் அதீத உச்ச நிலை அடைந்தது எப்போது? கவி கைகளில் பேனாவால் ஒரு மெகன்தி டிசைன் போட்டபோது!

"கவி, என்ன செய்யிற? சரி. இனி ஒன்றும் கதைக்கு ஆகாது. நீ போய் தூங்கு, சாயங்காலம் மீதிய பார்க்கலாம். நான் நாளை என் காலேஜ்க்கு தயார் ஆகணும். செல்லை உருட்டாதே."

பிரேமின் தந்தையும் ஸ்வேதாவும் ஒரே கல்லூரியில் பணி செய்கிறார்கள். பிரேமின் அப்பா பயங்கர சாது. சிகரட்தான் ரொம்ப அதிகம். அவர் ரிட்டயர்ட் ஆகும் வருடம் இது.

"யோவ் உம் பக்கத்தில் பத்து நிமிடம் யார் இருந்தாலும் அவருக்கு கேன்சர் வரும் ரிஸ்க் ரொம்ப அதிகமய்யா. நீர் தப்பிப்பதே உன் ஆத்துக்காரி நடத்தும் வரலெட்சுமி விரதம்தான்பா காரணம். நம்ம ஆளு கோயில் பக்கம் போறது கிடையாது. ஸோ நான் கிளம்பிடுறேன்ய்யா" என்று எதிர் வீட்டு சுஜாதா அங்கிள் கூறுவார்.

"கவி நீ பிரேமுடன் மொட்டை மாடியில் என்ன செய்தாய்? நான் நீ போனதை பார்த்தேன். வேண்டாம் கவி, ஸ்வேதா அம்மாவுக்கு தெரிந்தால்..?" சுதா கேட்டதற்கு பதில் இல்லை. சுதா கவிக்கு பள்ளியின் முதல் நாளில் இருந்தே நல்ல தோழி. அவள் எதிர்வீட்டு சுஜாதா அங்கிளின் ஒரே மகள். இரு குடும்பத்திற்கும் நல்ல உறவு இருந்தது.
"கவி நீ செய்வது தப்பு உனக்கு ரொம்ப நெஞ்சழுத்தம் நான் கத்திகிட்டே இருக்கேன் நீ பேசாம இருக்குற?" – சுதா.

"சுதா, உன் விஷயத்தில் நான் மூக்கை நுழைப்பது இல்லை, அதுபோல நீயும் இரேன்."

"கவி பளீஸ்பா ப்ளீஸ்."

‘நான் ஸ்மார்டாதான் இதை செய்கிறேன் என்று சொன்னால்? தப்பு தப்பு என்று புலம்புவாள், பிரேமை விட முடியாது. அதை அவளுக்கு, இல்லை இல்லை, யாருக்கும் புரியவைக்க முடியாது. ஒரு ஆண்ணின் கைகளை மறுக்கும் திடம் ஒரு பெண்ணுக்கு இல்லை... முக்கியமாக அவனது உதடுகளை மறுக்கும் திடம் ஒரு பெண்ணுக்கு இல்லவே இல்லை. அவளது பலகீனம் அவளது உடலில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.’- கவி  மனதில்.
சுதா தவறு செய்யவில்லையே என்று அவளது மனசாட்சி கேட்டபோது சுதாவிடம் பிரேம் பழகவில்லை என்று கெட்டிக்காரத்தனமாய் காரணம் சொன்னது மனது.

சிற்பமும் அவள் சிற்பியும் அவள்Where stories live. Discover now