கவி அகிலைப் பற்றி தனது அம்மாவிடமும் சுஜாதா அங்கிளிடமும் சொன்னதும், சுஜாதா அங்கிள் அகிலைப்பற்றி அக்கு வேர் ஆணி வேராக ஆராய்ந்துவிட்டார். தனம் ஆச்சிக்கு எல்லையில்லா ஆனந்தம். ஸ்வேதாவும் ஷ்யாமும் அன்றே இந்தியா வந்தனர். திருமணம் இரண்டு நாளிலா? என்ற கேள்விக்கு கௌஷிக்தான் இதுவே ரொம்பவும் தாமதம் என்று அகில் புலம்புவதாகக் கூறவும், அனைவரும் மறுபேச்சின்றி ஒத்துக்கொண்டனர்.
திருமணம், பதிவுத் திருமணம் என்பதால் ஆடம்பரம் இல்லாத வரவேற்பு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாள், கிழமை பார்க்கவில்லை..
இருவருக்கும் அதில் நம்பிக்கையில்லை. இரண்டு நாட்களில் திருமணம் என்று பெரியவர்கள் முடிவு செய்தனர். கவி தனது ஆச்சியிடம் தனது திருமண செய்தியைச் சொன்னபோது அவர் நேரே திருப்பதிக்குச் சென்று பெருமாளுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தார்.‘சாரதா’ மடத்தில் சேர்ந்து சேவை தொடங்கியதால் எழுபது வயதில் தனம் ஆச்சி பலருக்குத் தாயானார். கவி தன் அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லிய பிறகு சுதாவிடம் சொல்ல ஏங்கிக் கொண்டிருந்தாள். சுதா கருவுற்றிருந்தாள். அதனால் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றவளை கவியால் தொடர்புகொள்ள முடியவில்லை. பகல் இரவு வேறுபாடு வேறு. அகில்கூட கிண்டல் செய்தான், "என்னிடம் கேள்வி கேட்டு தெரிந்து கொள்ள எத்தனையோ இருக்கும் போது சுதாவுடன் பேசுவதற்கு என்னம்மா துடிக்கிற? "
அவனுக்குத் தெரியுமா என்ன? கவி சுதாவுடன் பேசுகையில் அம்மையார் தான் முழு நேரமும் மூச்சு விடாமல் பேசுவது என்று ?
*******
முகம் அறியா மணிதர்கள். . .
*******
"ஏய் என்னப்பா இன்னும் நீ எனக்கு ட்ரீட் குடுக்கலை. அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்திட்டா அழுத்தமா ஒன்ற கொடுப்பேன் என்று சொன்னியே? உனக்கு ரொம்ப ஞாபக மறதி கூடிப்பேச்சு. ஏற்கனவே பக்கத்தில் விடமாட்டிக்கிற. இதையாவது ஞாபகப்படுத்தினா ஏதாவது கிடைக்கும் என்று நினைத்தால், அதுக்கும் ரியாக்ஷன் கிடையாதா?"