episode 2

159 14 5
                                    

அகில்

"அம்மா…. எனக்கு இரண்டு சப்பாத்தி போதும்" என்று கூறிக் கொண்டே அகில் அவன் சூட்கேஸை கையில் எடுத்துக் கொண்டு அடுக்களைக்குள் வர நினைத்தான். ஓமம் கலந்த பன்னீரின் நறுமணம் அடுக்களையிலிருந்து அவன் எழுந்த நொடியில் இருந்து வந்து கொண்டிருந்தது. மணி எட்டு, இனி ஒவ்வொரு நிமிடமும் அவன் கடிகாரம் காண்பிக்கும் முன் அவனுக்குத் தெரிந்துவிடும். மனதுக்குள்ளேயே அறுபது நொடிகளையும் எண்ணத் தொடங்கி விடுவான்.

அடுக்களைக்குள் புகும் முன் அவன் காதுகளில் ஒரு இளம் பெண்ணின் சத்தம். இருபது வயது நிரம்பாத ஒரு இளம் பெண்ணின் குரல் அவனுக்கு மட்டும் கேட்டது…..

"அகில்…. என் சீப்பை எதுக்கு எடுத்த? எடுத்ததை எடுத்த இடத்தில் வச்சியா? அதுவும் இல்லை. அகில்.. எங்க வச்சித் தொலஞ்ச?"

அகில் உடனே தனது ஷேவிங் கீரிம் பக்கத்தில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் என்ற நிலையில், அதன் பக்கத்தில் இருந்த சீப்பை எடுத்து ட்ரஸிங் டேபிலில் வைத்தான். மீண்டும் அதே குரல்.

"அகில் ஹாவ் எ குட் டே. பொண்ணுங்களை சைட் அடிக்காதே!"

அவன் உதடுகள், "சரி. தாங்ஸ் ரேஷ்மா" என்று முணுமுணுத்தன.
அடுக்களைக்குள் நுழைந்தான். அம்மா நின்று கொண்டு சமைப்பதைப் பார்த்தான். அவன் வலது கையோரமாய், சுவர் அருகில் இருந்த நாற்காலியை எடுத்து வந்து அம்மா பக்கத்தில் வைத்து, அதில் தன் அம்மாவை உட்காரவைத்தான்.

"நின்று கொண்டே சமைக்கவா இதை மெனக்கெட்டு செய்திருக்கு? அடுப்புத்திண்டின் உயரத்திற்கு ஏற்றார்போல இதை செய்துருக்கேன் மா. உங்களுக்கு இதில் உட்கார்ந்தபடியே சமைக்க முடியும். எவ்வளவு மணிநேரம் நாள் முழுவதும் நிற்பீங்க? இனிமே கிரச்சுக்கு போகணும். அங்கேயும் நின்னுட்டே இருப்பீங்களே?"
மகனின் பேச்சை சிறு தலையசைவில் மறத்துவிட்டு அகில் அம்மா சொன்னார், "அகில், உன் பாட்டி, பூட்டி செய்த வேலைகளை விட நான் செய்றது கம்மிதான். வா சாப்பிடலாம்."
"அவங்க எல்லோரும் உட்கார்ந்து குழல் ஊதி அடுப்பு மூட்டி சப்பாத்தி செய்தாங்கம்மா... அறுபது வருஷம் முன்னாடி அடுக்களையில் யாரும் நின்று கொண்டே சமைப்பது இல்லை. இன்றைய பெண்களுக்கு கால்வலி மூட்டுவலி வருவதே இப்படி நாள் பூராவும் நின்னுட்டே சமைப்பதால் தான். அந்தக் காலத்துல... அதான் அறுபது வருஷம் முன்னே... அம்மியில் அரைப்பதில் தொடங்கி பாத்திரம் கழுவும் வேலைவரை உட்கார்ந்து தான் செய்தாங்க..."
"சரி சரிப்பா. அகில்… நீ சாப்பிடப்பா.. நேரம் ஆகுதுல்ல?"
அகில் சப்பாத்தியை விழுங்கவும் கடிகாரம் மணி எட்டு முப்பது என்று காண்பித்தது. தனது காரின் கதவைப் பிடித்துக் கொண்டு அம்மாவிடம் கிளம்பட்டுமா? என்று கேட்டான். அம்மா அவனிடம் தலை அசைத்து சரி என்றதும் காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து F.M ஓடவிட்டுக் கொண்டே வண்டியைக் கிளப்பினான். பழமுதிர்ச்சோலை கடந்து சென்றவனுக்கு, ஒரு மாலையில், அந்த பழமுதிர்சோலையில் சாத்துக்குடி ஜூஸை மிகவும் பொறுமையாக குடித்தது ஞாபகம் வந்தது. அப்போது ஆர்டர் செய்யும்போதே சீனி வேண்டாம், ஐஸ் வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான். அவன் அருகில் இரண்டு குழந்தைகள் வெண்ணிலா மில்க் ஷேக்கை ருசித்து குடித்துக் கொண்டிருந்ததும் ஞாபகம் வந்தது. மனதில் அதன் காலரியை கணக்குப் போட்டான்.
எஸ்சன்ஸில் உள்ள சுகர்  = 50
ஐஸ்கிரீமில் உள்ள சுகர்   =600
      பாலில் உள்ள சுகர் =100

சிற்பமும் அவள் சிற்பியும் அவள்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin