போட்டி நாள். . .
ஜாஃபர் பரபரப்பாக வேலை செய்தான். கலீம் அவனிடம், "தேவையில்லாமல் எதற்கு பெட் வைப்பானேன்? பிறகு இப்படி அல்லாடுவானேன்?" என்று கேட்டான்.
"கலீம் நல்லா படிச்சியா?" என்று ஜாஃபர் கேட்டான்."எதுக்கு?"
"எதுக்கா? இன்றுதான்டா போட்டியே!"
"ஓ.. படிச்சாச்சு! படிச்சாச்சு!” என்று ஜாஃப்ரை சமாதானம் செய்தவன் அகிலிடம் திரும்பி,
“அகில் நீ படிச்சிட்டியா? உனக்கென்ன உன் மேல்மாடி படு கெட்டி நீ கவலைப்படத் தேவையில்லை!" என்று சொன்னபோது,.
"கவி எனக்கு ஈசியாகதான் கேள்வி கேட்பா! நாங்க எல்லாம் திக் ஃப்ரண்ட்ஸ் தெரியுமா? ஜாஃபர் தான பெட் வச்சான்? அவன் தான் விழுந்து வழிந்து படிக்கணும்!" என்று அகில் சொல்லும்போதே கௌஷிக்கும் வந்து சேர்ந்தான்.."ஜாஃபர் இது என்ன?" என்று தனது கைபேசியின் அழைப்புகளை அவனிடம் காண்பித்தான் கௌஷிக்.
ஜாஃபர் அவனிடம் "இன்று ஞாயிற்றுக்கிழமை. கௌஷிக் நீ மறந்து காலையில் தூங்கிடக்கூடாதுல்ல.. அதான்..""அதுக்காக? பதிமூன்று மிஸ்டு காலா? ரொம்ப ஜாஸ்தி! அவன் காலர் டோனை முதலில் மாற்ற சொல்லு அகில்..
"கௌஷிக், Your friend is calling you"
என்று வருது. ஞாயிற்றுக்கிழமை ஏழு மணிக்கு எழுப்பினால் அவன் என் ஃப்ரண்டே இல்லை தெரியுமா?""விடு டா கௌஷிக் அவனுக்கு பயம்.. எங்கே கவிகிட்ட தோத்துப் போயிடுவோமோ என்று" என்ற சமாதானத்தை அகில் சொல்லும்போது, கவி, கண்மணி, ஸ்வர்ணா மூவரும் வந்து சேர்ந்தனர்.
******போட்டி இனிதே முடிந்தபோது கவியிடம் விலையுயர்ந்த மருத்துவ புத்தகங்கள் நான்கு இருந்தன.
கண்மணி தனது ஆப்பிள் ஃபோனை இறுகப்பற்றியபடி ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தாள்.
ஆம் போட்டியில் கவி வென்றுவிட்டாள். பெண்கள் தங்களது கைபேசியை இழக்கவில்லை.
