episode 16

69 13 1
                                    

சுதாவின்  திருமணம்...

சுதாவின் திருமணம். அகில் மற்றும் அவன் அம்மா வந்திருந்தனர். கவி தாவணியில் வந்திருந்தாள். அகிலுக்கு அந்த காஸ்ட்யூம் பற்றித் தெரியாதலால் அவன் கௌஷிக்கிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவர்கள் வழக்க கல்யாணங்களைப் போல் இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தது கல்யாண மண்டபம். தானும் திருமண பந்தத்தில் சீக்கிரம் நுழைய வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். மணமகன் அறைக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். "பத்து மணி முகூர்த்தம் அம்மாவால் எட்டு மணிக்கே வந்தாச்சு" என்று புலம்பினான். மணமகன் அறை பக்கமாக நின்று கொண்டான். சிறிதும் எதிர்பார்க்காததால் சுதா மணமகன் அறைபக்கம் வந்ததும் மிகவும் திடுக்கிட்டான்.

"அகில் கொஞ்சம் வழி விடுங்கள்" என்று அமைதியாக கேட்டாள் சுதா.
அகில் கொஞ்சம் வழிவிட்டு நின்று கொண்டான். வாசலில் சுதாவின் வருங்கால கணவன், செந்தில், அவளை எதிர்பார்த்திருந்தான் போல. அவளுக்காக கதவைத் திறந்து விட்டான்.

அறைக்கதவு திறந்து வைத்தாள். அறை வாசலில் நின்ற அகில் கிளம்பிவிட நினைத்தான். ஆனால் செந்தில், “உள்ளே வாங்க சுதா இப்ப கிளம்பிடுவா.. நீங்க உள்ளே வாங்க!” என்று அகிலை அழைத்தான்.

மணக்கோலத்தில் சுதா மெழுகு பொம்மைபோல இருந்தாள். செந்தில் முகத்தில் பெருமையும், சேட்டையும் சேர்ந்து ரகளை செய்தது.
சுதா உள்ளே வந்ததும் அகிலைப் பார்த்து கொஞ்சம் தயங்கினாள். பிறகு, சிறு வெட்கத்துடன் சொன்னாள்,
"செந்தில் உங்களுக்கு தங்கை இல்லை. நாத்தனார் முறையை கவி செய்தால்…?”
சுதா முடிக்கும் முன் செந்தில் கூறினான்,
"அதனால் ஒன்றுமில்லை சுதா.. இதற்காகத்தான் ‘நான் நேரில் ஒரு விஷ் கேட்கணும்’ என்றெல்லாம் பீடிகை போட்டியா?"

"இல்லை செந்தில் நான், இது எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தவே நேரில் வர நினைத்தேன். கவியும் நானும் பிரியப்போகும் இந்த நேரத்தில் இது ஒரு சிறு ஆறுதல்.. இல்லையா?”

சிற்பமும் அவள் சிற்பியும் அவள்Where stories live. Discover now