episode 8

66 13 1
                                    

"கவி இங்க என்னிடம் வாயேன்"

"ஆச்சி எனக்கு பசிக்கலை. நான் தூங்கப் போறேன்."

"சரி தூங்கு, எனக்கு தூக்கம் வரலை அதான் உன்கிட்ட பேசலாம்ன்னு நினைத்தேன்."

கவிக்கு ஆச்சி தன்னை தேற்ற நினைப்பது புரிந்தது. எதுவானாலும் சாப்பிடக் கூடாது, அப்போதுதானே அம்மா பார்க்கும்போது மெலிந்து கன்னம் வற்றித் தெரியும், என்று மனதுக்குள் தீர்மானம் செய்து கொண்டு ஆச்சியிடம் சென்றாள்.
"ம்.. ஆச்சி எதுக்கு கூப்பிட்டீங்க?"

"கவி உன்கிட்ட ஒரு கேள்வி!"
கவி வசதியாக ஆச்சியின் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்தாள்.

"ம்.. கேளுங்க."

"கவி, உன் தாத்தாகிட்ட எனக்கு பிடிச்ச விஷயம் எதுன்னு தெரியுமா?"

“சொல்லுங்க.."

"அவர் என்னை "டி" போட்டுப் பேசியதில்லை. என்னை ‘தனம்மா’ என்று அம்மா சேர்த்துதான் கூப்பிடுவார்.. ஒருவர் நம்மை இப்படி நேசித்தால்? அவர்களுடைய அன்பை எப்படி திருப்பிக் கொடுப்பது? அவருடைய சந்தோஷத்திற்கு நாம் முழு காரணகர்தாவாக இருந்து திருப்பிக் கொடுக்கவேண்டும். அதில் நான் உறுதியாக இருந்தேன். அவர் உயிர் பிரியும் வரை அதைக் கடைப் பிடித்தேன் கவிம்மா. நம்மை அன்பால் கட்டிப் போடுபவரை நாமும் அன்பால் கட்டிப் போட்டுவிட வேண்டும்… அந்த கட்டு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? எளிதில் எவரும் அதை அவிழ்க்க முடியாததாக இருக்க வேண்டும். கட்டுண்டவர் நினைத்தால் கூட அதை அவிழ்க்க முடியாததாக இருக்க வேண்டும்."

ஆச்சி என்ன சொல்ல வருகிறார் என்ற புரிந்து கொள்ள கவி முயற்சி செய்தாள். தனம் ஆச்சி மேலும் தொடர்ந்தார்.

"கவி ஆனால் ஒரே ஒரு காரணத்தால் அன்பின் கட்டு தெறித்து தானாக அவிழும் தெரியுமா? அது என்ன என்று உனக்குத் தெரியுமா?"

சிற்பமும் அவள் சிற்பியும் அவள்Where stories live. Discover now