வருண் மூச்சுக்காற்று. . . .
அனைவரும் சோதனைக் கூடத்தை விட்டு கிளம்பிப் போயாச்சு. கவியும் மதுவும் தவிர. இருவரும் சேர்ந்து கொஞ்சம் சந்தேகங்கள் கேட்டுவிட்டு வருவதற்குள் அனைவரும் கிளம்பியாச்சு.
சோதனைக் கூடத்தின் வாயிலில் கவி மதுவிடம் கேட்பதாக எண்ணி சத்தமாகக் கத்தினாள், "ஏய் மது உன் அனாடமி புக் என்னிடம் இருக்குதுப்பா.. உனக்கு அது எப்போது வேண்டும்?" ஆனால் அவள் பின்னால் திரும்பும் போதுதான் அவள் பின்னால் நின்றது 'வருண்' மதுவல்ல என்று புரிந்து கொண்டாள்.
"வருண், மது எங்க? ம்?"
"மது??? நான் அவளைப் பார்க்கலயே… உன்னைத்தானே பார்த்தேன்.."
அவன் பதிலில் சிறு நெருடல் இருந்தது. கவி ஏதோ தப்பாகயிருக்கே?? என்று எண்ணும்போதே வருண் அவள் கைகளைப் பற்றி அவள் சந்தேகத்தை உறுதிபடுத்தினான்.
வருண் மூச்சுக்காற்று கவியின் கண் இமைகளின் மீது வீசியது. கண்களை அவன் மூச்சுக்காற்றிடம் இருந்து விலக்கினாள். ஆனால் அவன் விடுவதாக இல்லை. மதுவின் குரல் கீழே பால்கனியில் இருந்து வந்தது.
"கவி.. நான் கிளம்பட்டுமா? எனக்கு பஸ் போயிடும்."
கவி வாயைத்திறக்கும் முன் வருண் அவள் வாயைப் பொத்தினான்.
"கவி, நான் போறேன். சரியா? நாளை பார்க்கலாம்." என்று கூறிக்கொண்டே மது வாசலுக்குச் சென்று விட்டாள்.
கவியால் வருண் பிடியிலிருந்து விலக முடியவில்லை.
"கவி.. இங்க என்னைப் பாரேன்.. நான் உன்னை முழுங்கிடவா போறேன்? என்னைப் பாரேன்!"கவி கண்களைத் திறந்து வருணைப் பார்த்தாள்.வருண் அவள் கீழ்ப்படுதலை தனக்கு எப்படி சாதகமாக்க என்று யோசித்தவாரே..
"கவி.. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உன் கூட பழகணும்னு நினைக்கிறேன். நீதான் விலகி விலகி ஓடுற. ஒரு 'யஸ்' சொல்லேன். என்னுடன் பழக பயமாக இருக்கா? என் அப்பா ஒரு மினிஸ்டர் என்பதால் என்னைப் பார்த்து பயப்படுறியா? இல்லை நான் என் F.B யில் ஒரு லன்டன் பொண்ணுடன் நின்ற போட்டோ பார்த்து ஓடுறியா, அது போன முறை நான் லன்டன் போனப்ப எடுத்த ரேன்டம் போட்டோ. ம்! சும்மா ஒரே ஒரு போஸ். அவ்வளவுதான். லன்டனில் அந்த இடம் ரொம்ப 'Eye catching’ ஆக இருந்ததா.. அதான் ஒரு ஃபோட்டோ எடுத்தேன் அவளுடன். ஒரு போட்டோவுக்கு சார்ஜ் செய்வாங்கலாம். ஒரு ஃபோட்டோவுக்கு மட்டும் முன்னூறு யூரோ" என்று கூறியவன் அவள் கன்னத்தில் இரு கை வைத்து கன்னங்களைப் பொத்தினார்போல் முன்னே இழுத்து அவள் இதழை தன் இதழால் மெல்ல மெல்ல வருடிக் கொடுத்தான்.
![](https://img.wattpad.com/cover/249536717-288-k951769.jpg)