episode 9

72 13 1
                                    

மறுநாள் விடிந்ததும் கவி தன் வேலைகளை துரிதமாகச் செய்தாள். இரவு முழுவதும் கவி மனதில் ஒரு கேள்வி உறுத்திக் கொண்டேயிருந்தது. ஆச்சி தன் வேலைகளை முடிக்கும் வரை பொறுமை காத்து, அவர் ஓய்வாக அமர்நதபிறகு கேட்டாள்.

"ஆச்சி உங்களுக்குத் தெரியுமா இப்போது அவன் என்ன செய்யிறான்னு?"
"மாதம் இருபதினாயிரம் சம்பாதிக்கும் நல்ல வேலையில் இருக்கான் கவி."

சிறிது நேரம் அமைதியாக இருந்தார் ஆச்சி. பிறகு கவியிடம் கேட்டார், "கவி இப்ப நீ சாப்பிட வரியா?"

"ம் வர்றேன் ஆச்சி"

கவியின் செயல்களில் மாற்றம் தெரிந்தது. ஸ்வேதா இதைக் கவனிக்கத் தவறவில்லை. கவி தனது அறையில் முடங்கிக்கிடக்காமல் சுதாவுடன் சேர்ந்து ஹாலில் படித்தாள். தனது கைபேசியை அம்மாவின் அறையிலேயே வைத்திருப்பாள். அவளுக்கு வரும் அழைப்புகளை அம்மா முன் நின்றே பேசுவாள். பேசி முடித்ததும் அம்மாவின் அறையிலேயே கைபேசியை வைத்துவிடுவாள். ஒரு மாதம் பள்ளிக்குச் செல்லாததால் குவிந்த பாடங்களைப் படித்து முடித்தாள்.

கவி கணிதம் படித்துக் கொண்டிருந்தாள். ஸ்வேதா, தண்ணீர் குடிக்க அடுக்களைக்குள் நுழையும்போது தான் கவனித்தாள், கவி இருந்த ஹாலின் ஃபேன் ஓடாமல் இருந்தது. மின்விசிறி சுவிச்சை அழுத்தினாள் ஸ்வேதா.
கவி உடனே, "வேண்டாம்மா… ஃபேன் போட்டால் காற்று வரவர தூக்கம் வருதும்மா. அதான் போடலை." என்று காரணம் சொன்னாள்.

ஸ்வேதா தனது பிரமிப்பை காட்டாமல் அமைதியாக உள்ளே சென்றுவிட்டாள்.
கவிக்கு தனிமை நிறையவே கிடைத்தது. தனது உடலின் ஒரு அங்கமான மூளையை கசக்கிப் பிழிந்தாள்.

பிரேம்.... தவறான இன்பம் என்ற தெரிந்து தானே மனம் துணிந்தது? ஆறு மாதத்திற்கு பிறகு இந்த உறவு எங்கே செல்லும் என்று ஏன் நான் யோசிக்கவில்லை?

மூடி வைத்த பாத்திரத்தை திறந்து என்ன இருக்கிறது என்று பார்க்கும் முன்வரை தான் மனதிற்குள் பரபரப்பு இருக்கும்.. அந்த மூடியை திறந்ததும்  அடுத்த நொடி ஆர்வம் அடங்கிவிடுகிறது. மூடி இறுக்கமாக இருந்தால் ஆர்வம் இன்னும் கூடுகிறது. அந்த மூடியை அருகில் உள்ள மேஜையில் இரண்டு தட்டு தட்டிவிட்டு பாத்திரத்தை திறந்த பிறகுதான் நிம்மதி. அதனால்தான் தனக்கும் பிரேமிடம் ஆர்வம் உண்டானதா? இல்லை.. புத்தியை இரவல் கொடுத்து, அழுக்கை உடல் முழுவதும் தாமே அப்பிக்கொண்டோமோ?

சிற்பமும் அவள் சிற்பியும் அவள்Where stories live. Discover now