நிழல் -59

1.1K 69 32
                                    

மேகா அபியை திட்டி விட்டு மருத்துவமணைக்குள் செல்ல அபியும் அவள் பின்னே சென்றான். மேகா கோவமாக நாற்காலியில் அமர அபியும் அவள் அருகில் அமர்ந்தான். மேகா அபியை முறைக்க அபி எதும் அறியாதது போல் வேறெங்கோ பார்த்தபடி இருந்தான்.

"மேகா கொஞ்சமாச்சி சாப்பிடு காலையில இருந்து இன்னும் சாப்பிடல அப்பாக்கு தான் ஒன்னும் இல்லை இல்லை இப்பவாவது சாப்பிடேன்" என்று ஆதர்ஷ் கெஞ்சிக் கொண்டிருக்க மேகா "வேணா ஆது கம்ப்பல் பன்னாத" என்று கூறியவள் ஆதர்ஷ் கையில் இருந்த சாப்பாட்டை விலக்கி விட்டாள்.

அபி அதை கண்டு ஆதர்ஷை பார்த்து "டேய் அவ தான் வேணான்னு சொல்ரா இல்லை நா காலையில இருந்து சாப்பிடல அதனால தான் என் பொண்டாட்டியும் சாப்பிட மாட்டன்னு அடம்பிடிக்கிறா எனக்கும் ஒரு பார்சல் வாங்கிட்டு வா நா சாப்பிட்டு நா ஊட்டி விட்டா தான் சாப்பிடுவா இல்லையா செல்லம்" என்று மேகாவை பார்த்து சிரித்துக் கொண்டே கொஞ்சலுடன் கேட்க மேகா அபியை முறைத்துக் கொண்டே "நீ சாப்பிடலனா நா ஏன் டா சாப்பிடாம இருக்கனும் ஆதர்ஷ் கொடு டா அத" என்று ஆதர்ஷ் கையில் இருந்த சாப்பாட்டை பறித்தவள் உண்ண தொடங்கினாள்.

அபி அதே சிரிப்பு மாறாமல் அவன் தாடையில் கை வைத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆதர்ஷ் தன் அண்ணனின் தந்திரத்தை புரிந்துக் கொண்டு சிரித்தவன் தண்ணீரை மேகா அருகில் வைத்து விட்டு ஜெய்யை சாப்பிட வைக்க அழைத்து சென்றான்.

அபி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டவள் "கண்ண நோன்டிருவன் ஒழுங்கு மரியாதையா திரும்பிரு" என்று சாப்பாட்டை வாயில் திணித்தபடி மேகா கூற அபி மேகா உதட்டோரம் சிக்கி இருந்த சாதங்களை கையில் எடுத்து உண்டவன் "நீ எப்படி ரியாக்ட் பன்னாலும் அழகா இருக்க டி அதான் என் கண்ணு உன்னை விட்டு நகர மாட்டிந்து" என்று கூற

மேகா அபி கையை தட்டி விட்டு "இந்த சினிமா டைலாக் எல்லாம் உன் படத்தோட வச்சிக்க என் கிட்ட பேசாத அதுக்கு நா மயங்க மாட்டன்" என்று கூறியவள் சாப்பிட்ட காகிதத்தை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றவள் குப்பை தொட்டியில் போட்டு விட்டு கை கழுவியவள் உள்ளே சென்றாள்.

உன் நிழலாக நான்Where stories live. Discover now