நிழல் - 18

1.5K 70 24
                                    

விஷானிக்கு உடல் நலம் சரியில்லாமல் இருக்க ஜெய் வந்து அவளிற்க்கு ஊசி போட்டு விட்டு ஊருக்கு போவதாக கூறி சென்று விட மேகா அபிக்கு அழைக்க அழைப்பை நிஷா ஏற்றாள்.

"ஹலோ" என்று அதிகாரமாக நிஷா கூற மேகா "ஹலோ யுகி இருக்காரா" என்று கேட்க நிஷா "ஏய் யார் டி நீ எவ்வளவு தைரியம் இருந்தா அபிய பேர் சொல்லி கூப்டுவ ஒழுங்கு மரியாதையா சார்ன்னு சொல்லு" என்று திட்ட மேகா அழைப்பை துண்டித்து விட்டாள். நிஷா கோபமாக அபி போனை பார்த்து விட்டு "ச்ச மேனர்ஸ் இல்லாதவ பேசிட்டு இருக்கும் போதே கட் பன்றா" என்று மேகாவை திட்ட "மேனர்ஸ் இல்லாம அபி போன நீ எடுக்கலாம் ஆனா அந்த பொண்ணு கட் பன்ன கூடாதா" என்று ஹர்ஷன் கேட்க

"லுக் மிஸ்டர் ஹர்ஷன் இது என் பியான்ஸியோட போன் எனக்கு இதுக்கு வர போன் கால்ஸ அட்டன் பன்ற உரிமை இருக்கு நீங்க எனக்கு மேனர்ஸ் பத்தி சொல்லி தர வேணா மைன்ட் இட்" என்று கூறி விட்டு நிஷா எழுந்து சென்று விட விதர்ஷன் "அவள பத்தி தான் உனக்கு தெரியுமா அப்பறம் ஏன் டா அவ கிட்ட வாய் கொடுக்கற" என்று ஹர்ஷனிடம் கூற ஹர்ஷன் தோலை குழுக்கினான்.

மேகா அபி போனை நிஷா எடுத்ததால் ஆருஷாவிற்க்கு அழைத்து மித்ரன் எண்ணை வாங்கியவள் மித்ரனிற்க்கு அழைத்தாள். மித்ரன் கைப்பேசி விதர்ஷனிடம் இருக்க கைப்பேசியை எடுத்தவன் "ஹலோ" என்க மேகா "மித்து அண்ணாவா" என்று கேட்க

"நா விதர்ஷன் பேசறன் மா மேகா என்ன விஷயம்" என்று விதர்ஷன் கேட்க

மேகா கோவமாக "டேய் வீணா போனவன்களா உங்களுக்கெல்லாம் அறிவுன்னு ஒன்னு இருக்கா இல்லையா டா கொஞ்சமாச்சி பொறுப்பு இருக்கா பெரிய பருப்பாட்டும் எல்லாரும் கிளம்பி ஷூட்டிங் போய் இருகிங்க நீங்க மட்டும் இப்ப என் முன்னாடி இருந்திங்க நாலு பேர் கழுத்தையும் திருகி காக்காக்கு போட்ருப்பன் தண்டங்களா மூஞ்சிங்கள பாரு" என்று திட்டிக் கொண்டிருக்க விதர்ஷன் கையால் கழுத்தை பிடித்துக் கொண்டு "என்னது காக்காய்கா" என்று முனுமுனுத்து விட்டு "இரு இரு மேகா இரு திட்றது தான் திட்ற காரணம் சொல்லிட்டு திட்டு மா இல்லனா அண்ணன் தலை வெடிச்சிரும்" என்று கூற ஹர்ஷன் என்ன என்று கேட்க விதர்ஷன் ஸ்பீக்கரை ஆன் செய்ய இருவரும் மேகா சொல்வதை கேட்க காதை கைப்பேசி பக்கம் திருப்பினர்.

உன் நிழலாக நான்Tempat cerita menjadi hidup. Temukan sekarang