மித்ரன் திருமணம் முடிந்து அடுத்த நாள் அபி விமல் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க படபிடிப்பு தொடங்க பூஜை ஏற்பாடு செய்திருக்க மேகா காலை விரைவாகவே சென்று விட அபி சரியாக பூஜை தொடங்கும் போது போய் சேர்ந்தான். படபிடிப்பு தொடங்க பூஜை ஏற்பாடு செய்திருக்க மேகா காலை விரைவாகவே சென்று விட அபி சரியாக பூஜை தொடங்கும் போது போய் சேர்ந்தான்.
மேகா அபியை வாய்க்குள்ளே திட்ட அபி அனைவரிடமும் ஓர் மன்னிப்புடன் பூஜையில் கலந்துக் கொண்டான். அங்கிருக்கும் யாவருக்கும் மேகா தான் அபியின் மனைவி என்று தெரியாது விமலை தவிர அவ்வளவு ஏன் அபிக்கு திருமணம் ஆகியது கூட அவர்களுக்கு தெரியாது. அபியும் சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை மேகாவும் நினைக்கவில்லை.
பூஜை சிறப்பாக முடிந்து க்ளேப்பை அபியே தட்டி விட்டு பூஜையை முடித்து வைத்தான். படபிடிப்பு தேதியையும் இடத்தையும் விமல் அனைவரிடமும் தெரிவிக்க அனைவரும் கலைந்து செல்ல அபியும் கார் அருகில் சென்றான். காரில் அமர்ந்தவன் மேகாவிற்க்கு அழைத்தான்.
மேகா அபியின் அழைப்பை பார்த்ததும் அவனை தேடி கார் அருகில் செல்ல அபி மேகாவை நோக்கி இறங்கி அவள் எதிரில் நின்றான். மேகா "எதுக்கு டா கால் பன்ன எனக்கு அங்க வேலை இருக்கு" என்று கூற அபி "நீ வேலை செஞ்சி தான் விமல் படம் எடுக்கனுன்னா அவன் படம் முடிஞ்ச மாதிரி தான் வா நம்ம வீட்டுக்கு போலாம் மத்த வேலைய விமல் பார்த்துபான்" என்று கூற அவள் கையை பற்றி இழுத்தான்.
மேகா அபி கையை தட்டி விட்டு "ஒழுங்கா ஓடி போய்டு எனக்கு வேலை இருக்கு நா அப்பறம் வரன் நீ கிளம்பு" என்று கூறியவள் திரும்பி சென்று விட அபி அவள் முதுகை முறைத்து விட்டு வீட்டிற்க்கு வந்து சேர்ந்தான். மேகா விமலுடன் சேர்ந்து படபிடிப்புக்கான இடம் நேரம் தேதி என்று அனைத்தையும் பார்த்து முடித்து விட்டு மதியம் போல் வீடு வந்து சேர்ந்தாள்.
அடுத்த நாளும் அபிக்கு முன்பே மேகா கிளம்பி பபடபிடிப்பு நடக்கும் இடத்திற்க்கு சென்று விட அபி அவனிற்க்காக குறிக்கப்பட்ட நேரத்திற்க்கு படபிடிப்பு நடக்கும் இடத்திற்க்கு சென்றான்.
CZYTASZ
உன் நிழலாக நான்
Romansஎதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.