மேகா அபியிடம் நிஷா தான் மித்ரனின் இந்த பொய் விளம்பரத்திற்க்கு காரணம் என்று எவ்வாறு உறுதியாக கூறுகிறான் அவனிற்க்கும் நிஷாவிற்க்கும் இடையில் என்ன என்று கேட்க அபி இதற்க்கு மேல் மறைப்பதில் ப்ரயோஜனம் இல்லை என்று உணர்ந்து அவனிற்க்கும் நிஷாவிற்க்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பில் இருந்து கூற தொடங்கினான்.
"நாங்க ஒன்னும் இப்ப இருக்க மாதிரி வசதியானவங்க இல்ல நிலா சாதாரண மிடில் க்ளாஸ் தான் வருமானம் போக கொஞ்சம் சேர்த்து வைப்போம் அவ்வளவு தான் காலேஜ் படிக்கும் போது ஒரு டாக்யூமென்ட்ரிக்காக என்னை நடிக்க சொன்னாங்க சரின்னு நானும் நடிச்சன் அத பார்த்துட்டு எங்க காலேஜ் ப்ரின்சிபல் நீ நல்ல நடிக்கிற டா நடிக்க போனா நல்ல ப்யூச்சர் உனக்கு இருக்குன்னு சொன்னாரு எனக்கு அது மனசுல ஆழமா பதிந்திருச்சி அதுக்கு அப்பறம் காலேஜ் படிச்சிட்டே நடிக்க சான்ஸ் கிடைக்குமான்னு தேடிட்டு இருந்தன் மித்ரன் நல்ல கதை எழுதுவான் சோ அவனும் ஒரு பக்கம் டைரக்டருக்கு சான்ஸ் தேடிட்டு இருந்தான் காலேஜ் முடிச்ச வருஷம் எனக்கு அந்த சான்ஸ் கிடைச்சது நா தேடி போகாத ஒரு பெரிய ப்ரடக்ஷன்ல இருந்து ரொம்ப சந்தோஷமா இருந்தது நானும் கடவுள் கொடுத்த சான்ஸ்ன்னு நடிக்க ஆரமிச்சன் மித்ரனுக்கும் அதே நேரத்துல சான்ஸ் கிடைச்சது இரண்டு பேருக்கும் இரண்டு வருஷத்துல ஐஞ்சி படம் எல்லாமே டாப் ஹிட் அதுக்காக ஒரு பார்ட்டி வச்சோம் அதல தான் பஸ்ட் டைம் நிஷாவ பார்த்தன் அழகா இருந்தா மார்டன் ட்ரஸ் தான் ஆனா அது மத்தவங்க கண்ண உறுத்தாத மாதிரி போட்ருந்தா நிஷா எங்களுக்கு முன்னவே நல்ல ஹீரோயின் யூ நோ விதார்த்" என்ற கேள்வியுடன் கண்ணில் ஆச்சரியமும் பிரகாசமும் கலந்தவாறு கேட்டு மேகா முகத்தை பார்த்தான் அபி.
மேகாவும் "ம்ம் தெரியும் நல்ல ஆக்டர் மூனு வருஷத்துக்கு முன்ன வரைக்கும் டாப் டென்ல இருந்தவர் ஆனா இப்போ நடிக்கிறது இல்ல" என்று அபியின் கண்ணில் தெரியும் மாற்றங்களை பார்த்தவாறு பதில் அளித்தாள்.
YOU ARE READING
உன் நிழலாக நான்
Romanceஎதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.