மித்ரன் சோகமாகவும் அபி கோவமாகவும் அறையில் இருக்க விதர்ஷன் "மேகாவ யாரோ கட்டி பிடிச்சா நீ ஏன் டா கோவப்பட்ற நிஷா உன் லவ்வர் வருங்கால ஒய்ப் தான அவ கிட்ட ஏன் கோவப்பட்ற" என்று விதர்ஷன் கேர்க அபி பதட்டமடைந்தான்.
"சொல்லு டா ஏன் அமைதியாகிட்ட" என்று ஹர்ஷனும் கேட்க அபி "நிலா என் ப்ரண்ட் அதனால தான் கோவம் வந்துச்சி" என்று அபி கூறி சமாளித்தான்.
"மித்ரனும் ஆரம்பத்துல ஆருஷா மேல எந்த எண்ணமும் இல்லன்னு தான் டா சொன்னான் இப்போ அவ வேற ஒருத்தன கல்யாணம் பன்னிக்கோங்கன்னு கேட்டதுல இருந்து சார் அழுதுட்டு இருக்கார் லவ் பன்றாராம் நீயும் இவன மாதிரி ஆகிடக் கூடாதுன்னு தான் சொல்ரோம் ஒழுங்கா மனசுல இருக்கறத சொல்லிரு அப்பறம் கை மீறி போன அப்பறம் அழுது புரண்டா பிரயோஜனம் இல்லை" என்று விதர்ஷன் கூற
அபி "ஐய்யோ அப்படி எல்லாம் இல்ல டா நிஜமா அவ என் ப்ரண்ட் அவ்வளவு தான்" என்று கூற "இதுக்கு மேல உன் இஷ்டம்" என்று கூறி விட்டு ஹர்ஷன் உடை மாற்ற சென்று விட்டான்.
படபிடிப்புக்கு வந்தவர்களுக்கு சமைக்க ஆட்கள் ஏற்பாடு செய்ததால் அவர்கள் உணவை தயார் செய்து வைத்திருக்க அனைவரும் உண்டனர். இரவு உணவுக்கு பின் அனைவரும் சென்று உறங்க மித்ரனிற்க்கும் அபிக்கும் உறக்கம் வரவில்லை அபி கைப்பேசியில் படம் பார்த்துக் கொண்டு வீட்டிற்க்கு வெளியில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். மித்ரன் மாடிக்கு சென்று வானத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
மித்ரன் கண்ணிற்க்கு சாலையில் இரண்டு உருவம் இருளில் நடந்து வருவது போல் தெரிய உற்று பார்த்தான். அந்த உருவம் பெண்கள் என்று தெரிய மித்ரன் "இந்த நேரத்துல யாரா இருக்கும்" என்ற சிந்தனையுடன் அவர்களையே கவனிக்க தொடங்கினான்.
அந்த உருவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்க்கு வர மித்ரன் இருவரையும் கண்கள் விரிய பார்த்தான். "இவங்க இரண்டு பேரும் இந்த நேரத்துல எங்க போய்ட்டு வராங்க" என்று நினைத்தவன் கீழே இறங்கி சென்றான்.
YOU ARE READING
உன் நிழலாக நான்
Romanceஎதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.