நிழல் - 50

1K 61 13
                                    

ஹர்ஷனிற்க்கும் நவினாவிற்க்கும் திருமணம் நடந்து முடிய நண்பர்கள் நால்வரும் விஷானி மேகா இருவரும் அவர்களுடன் அமர்ந்திருக்க மித்ரன் தன் திருமணம் நடக்க தடையாய் இருந்த தன் மாமன் மகளை திருமணம் செய்துக் கொண்ட ஆனந்ததில் ஹர்ஷனை கட்டி அணைத்து நன்றி கூற மேகா சிரிக்க தொடங்கினாள்.

அனைவரும் அவளை கேள்வியாக பார்க்க மேகா "அட லூசு மித்து அண்ணா அவன் ஒன்னும் உனக்காக தியாகம் எல்லாம் பன்னல அவன் லவ் பன்ன பொண்ண தான் கல்யாணம் பன்னி இருக்கான்" என்று கூற அங்கிருந்த மித்ரன் விதர்ஷன் விஷானி அபி நால்வரும் ஹர்ஷனை கோரமாக முறைத்தவாறு திரும்ப ஹர்ஷன் திரு திருவென விழித்தவாறு நால்வரையும் மாறி மாறி பார்த்தான்.

"ஏன்டா பக்கி பயலே ஒரு ஆம்பள பிள்ளை கத்தி கதறி கண்ணீரோட உன்னை கட்டி பிடிச்சிட்டு நன்றி சொல்லிட்டு இருக்கன் நீ அமைதியா வேடிகையா பார்த்துட்டு இருக்க நாயே அத கூட மன்னிச்சிருவன் ஆனா... எவ்வளவு தைரியம் இருந்தா எங்க கிட்டையே நீ லவ் பன்னத மறச்சி இருப்ப உன்னை" என்று ஹர்ஷன் மேல் பாய்ந்த மித்ரன் அவன் வயிற்றின் மேல் அமர்ந்து அவனை அடித்தான்.

விஷானியும் மேகாவும் சிரித்துக் கொண்டிருக்க ஹர்ஷன் "டேய் டேய் உன் வீட்டு பொண்ண லவ் பன்றத உன் கிட்ட சொல்ல பயமா இருந்துச்சி டா அதான் சொல்லல ப்லீஸ் மன்னிச்சிரு டா வலிக்குது டா விடு" என்று அலற மித்ரன் மூச்சு வாங்க ஹர்ஷன் மேலிருந்து இறங்கி அமர்ந்தான்.

ஹர்ஷன் தட்டு தடுமாறி எழுந்து அமர அடுத்த சுற்றுக்கு விதர்ஷனும் அபியும் "அவன் கிட்ட சொல்ல பயம் சரி எங்க கிட்ட ஏன் சொல்லல" என்று ஹர்ஷனை அடிக்க சட்டை கையை மடக்கி விட்டு  தயாராக அவர்களை பீதியுடன் பார்த்த ஹர்ஷன் சுதாரித்து எழுந்து ஓட அபியும் விதர்ஷனும் அவனை துரத்த தொடங்கினர்.

ஹர்ஷன் இருவர் கையிலும் சிக்காமல் ஓட அபி ஒரு புறமும் விதர்ஷன் ஒருபுறமும் ஹர்ஷனை வழி மறைக்க ஹர்ஷன் இருவரையும் பார்த்து விட்டு இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளியை நோக்கி ஓட மித்ரன் "டேய் அந்த பக்கம் பள்ளம் டா விழுந்த உன் மேரேஜ் டே டெத்ட் டே ஆகிறும்" என்று கத்த ஹர்ஷன் சடன் ப்ரேக் போட்டு நின்று மித்ரனை முறைத்தான்.

உன் நிழலாக நான்Donde viven las historias. Descúbrelo ahora