நிழல் - 17

1.3K 68 12
                                    

அபி மேகாவை பார்க்க கூடாரத்திற்க்குள் சென்றான். மேகா அருகில் அமர்ந்தவன் அவள் கையை பற்ற மேகா கை நடுங்க உடல் சிலிர்த்து அடங்கியது. அவள் உடல் சிலிர்த்ததை உணர்ந்த அபி மேகா கையை இறுக பற்றிக் கொண்டான்.

வெளியில் மற்றவர்கள் அமைதியாக அமர்ந்திருக்க விதர்ஷன் "விஷானி போய் ட்ரஸ் சேன்ஜ் பன்னு" என்று கூற விஷானியும் மற்றொரு கூடாரத்திற்க்கு சென்று உடை மாற்றி வந்தாள். அடுத்து ஆருஷாவும் சென்று மாற்றி வர மற்றவர்களும் ஒவ்வொறுவராக சென்று மாற்றி வந்தனர்.

சிறிது நேரத்தில் மேகா கண் விழிக்க அவள் கண் முன் அபி கன்னத்தில் ஒரு கையை வைத்துக் கொண்டும் மற்றொரு கையை அவள் கையை பற்றியவாறும் அவளை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

மேகா கண் விழித்தததை கண்ட அபி "நிலா உனக்கு ஒன்னும் இல்ல இல்ல நீ நல்லா இருக்க இல்ல" என்று கேட்க மேகா அமைதியாக எழுந்து அமர்ந்தாள்.

அபி அவள் தோலை பற்றி அமர வைக்க மேகா எழுந்து அமர்ந்து "எனக்கு ஒன்னும் இல்ல யுகி" என்று கூறிய பின் தான் அபிக்கு நிம்மதியடைந்தது.

"ஆமா நீ ஏன் பாம்ப பார்த்து அப்படி பயந்த உனக்கு ஏன் அப்படி ஆகுது" என்று அபி கேட்க

"தெரியல பாம்புனா ரொம்ப பயம் அத பார்த்ததும் அங்கிருந்து ஓடி போய்டனுன்னு தோனும் ஆனா கால் நகரவே நகராது சின்ன வயசுல இருந்தே அப்படி தான்" என்று மேகா கூற

"சரி விடு இப்போ பரவால்லையா" என்று அபி கேட்க மேகா "ம்ம் மத்தவங்க எல்லாம் எங்க" என்று கேட்க

"வெளியே இருக்காங்க" என்று அபி கூற மேகா "சரி வெளியே போலாம்" என்று கூறி மேகா எழுந்திரிக்க அபியும் அவளுடன் எழுந்துக் கொள்ள இருவரும் வெளியில் வந்தனர்.

மேகாவை பார்த்ததும் விதர்ஷன் "ஹேய் மேகா இப்போ எப்படி இருக்கு" என்று கேட்க மேகா சிரித்துக் கொண்டே "பரவால்ல விது அண்ணா" என்று கூற

ஹர்ஷன் "ஓகே ஓகே எழுங்க பேக் பன்னுங்க கிளம்பலாம்" என்று கூற மற்றவர்களும் எழ மேகா "அதுக்குள்ளையா" என்று கேட்க

உன் நிழலாக நான்Where stories live. Discover now