அபியும் மேகாவும் காட்டில் இருந்து நடந்து வெளியில் செல்ல அப்பு அவர்களை பின் தொடர்ந்து வந்தான்.
மித்ரன் விடிந்தும் விடியாமலும் எழுந்தவன் ஆருஷா வீட்டிற்க்கு சென்றான். ஆருஷா அப்பொழுது தான் எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டு வெளியில் வந்தாள். மித்ரன் இவ்வளவு காலையில் வீட்டு வாசலில் நிற்பதை கண்ட ஆருஷா அதிர்ந்து "டைரக்டர் சார் இவ்வளவு காலையில இங்க என்ன பன்றிங்க" என்று கேட்க
"அது அபி இன்னும் வரல அதான் கொஞ்சம் என் கூட வரிங்களா காட்டோட என்ட்ரன்ஸ் வரைக்கும் போய் பார்த்துட்டு வந்தரலாம் எனக்கு மனசே கேட்கல நைட் எல்லாம் தூக்கம் கூட வரல" என்று மித்ரன் கூற
ஆருஷா புன்னகையுடன் "ப்ரண்ட் மேல அவ்வளவு பாசமா சரி இருங்க வரன் டூ மினிட்ஸ்" என்று கூறி உள்ளே சென்றாள். மித்ரன் வெளியில் அவளிற்காக காத்திருந்தான்.
ஆருஷா ப்ரஷ் ஆகி விட்டு வெளியில் வந்தவள் "வாங்க போலாம்" என்று மித்ரனை அழைக்க இருவரும் காட்டை நோக்கி நடந்தனர்.
ஆருஷாவும் மித்ரனும் காட்டிற்க்கு அருகில் செல்ல அபியும் மேகாவும் வெளியில் வந்தனர்.
ஆருஷா மேகாவை கண்டதும் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள். மித்ரன் அபியிடம் சென்று "அபி உனக்கு ஒன்னும் இல்லை இல்ல நீ நல்லா இருக்க இல்லை பைத்தியம் எதுக்கு டா காட்டுக்குள்ள போன ஊர சுத்தி பாக்றவன் ஊர மட்டும் பார்க்க வேண்டியது தான" என்று பதட்டமாக ஆரமித்து கோவமாக முடித்தான்.
"எனக்கு ஒன்னும் இல்லை டா நா நல்லா இருக்கன்" என்று அபி கூறி மேகாவை பார்க்க மேகாவும் ஆருஷாவும் புன்னகையுடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"இது என் ப்ரண்ட் என் மாமா பொண்ணு மேகநிலா" என்று ஆருஷா அறிமுகப்படுத்தினாள்.
மித்ரன் மேகாவை பார்த்து "தாங்க்ஸ் சிஸ்டர் இவன பத்திரமா கூட்டிட்டு வந்ததுக்கு" என்று கூற
"ப்ரதர் உங்க தாங்க்ஸ்ஸ நீங்களே வச்சிக்கோங்க இப்போ வாங்க போலாம் இங்க ரொம்ப நேரம் நிற்க வேணா பாரஸ்ட் ஆப்பிஸர் யாராவது பார்த்தா ப்ராப்ளம் ஆகிரும் வாங்க" என்று கூறி முன்னே செல்ல போக பின்னால் அப்பு பிளிறும் சத்தம் கேட்க நால்வரும் திரும்பி பார்த்தனர்.
YOU ARE READING
உன் நிழலாக நான்
Romanceஎதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.