மித்ரனின் தாய் மாமன் தன் பெண்ணிற்க்கு என்ன பதில் கூற போகிறாய் என்று கேட்க மித்ரன் மாமா என்று அதிர்ந்து அவரை பார்க்க ஆருஷாவின் கண்கள் அவள் அனுமதி இன்றி கலங்கி போனது.
"என்ன மாமா ....... சின்ன வயசுலே என் பொண்ணுக்கு நீதான்னு முடிவு பன்னி வச்சிருந்தோம் அத உன் அம்மா மறந்து போய்ட்டா ஆனா நா மறக்கல" என்று கூற ஆருஷா அங்கிருந்து நகர போக மித்ரன் அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தினான்.
ஆருஷா நிமிர்ந்து பார்க்கவில்லை ஆனால் அவளை பிடித்திருப்பது மித்ரன் தான் என்று தெரிந்தது. ஆருஷா திரும்பியும் பார்க்கவில்லை நகரவும் இல்லை அப்படியே நின்றிருந்தாள்.
"என்ன மாப்பிள்ளை நா சொல்லிட்டே இருக்கன் நீங்க அந்த பொண்ணு கையை பிடிச்சிட்டு நிக்கிறிங்க அந்த பொண்ணு போட்டும் விடுங்க உங்களுக்காக என் பொண்ணு இருக்கா" என்று அவர் கேட்க மித்ரன் அவரை முறைத்து கொண்டு ஆருஷாவின் கையை இறுக பற்றியவன் "நா தாலின்னு ஒன்னு கட்னா அது இவ கழுத்துல தான் கட்டுவன் எப்பவும் என் பொண்டாட்டி இவ தான்" என்று கூற
அவர் கோவமாக ஏதோ கூற வர அதற்க்குள் மித்ரனின் தாய் வந்து "அண்ணா வாங்க எப்ப வந்திங்க எப்படி இருகிங்க" என்று ஆனந்தமாக கேட்க மித்ரனின் தந்தை வாங்க மச்சான் உட்காருங்க என்று கூற அவர் கோவமாக "என்ன குடும்பமே சேர்ந்து நாடகம் ஆட்றிங்களா" என்று கத்த அவரின் கத்தலில் வெளியில் சென்றவர்கள் அனைவரும் வந்து விட்டனர்.
"என்னங்க என்ன ஆச்சி" என்று அவர் மனைவியும் "அப்பா என்ன ப்பா" என்று அவர் மகள் நவினா கேட்க அவர் இருவரையும் ஓர் முறை முறைக்க இருவரும் தலையை கவிழ்ந்து அமைதியாக நின்றுக் கொண்டனர்.
"என்ன நினைச்சிட்டு இருகிங்க எல்லாரும் மித்ரனுக்கு இந்த பொண்ணு கூட கல்யாணம்னா அப்ப இவ எங்க போறது சின்ன வயசுல இருந்து இவன் தான் மாப்பிள்ளைன்னு நினைச்சி வாழ்ந்துட்டு இருக்காளே அவளுக்கு என்ன பதில் சொல்ல போறிங்க" என்று ஆருஷாவையும் தன் மகளையும் கை காட்டி கேட்க அபி ஏதோ பேச போக அவன் கையை அழுத்திய மேகா மறுப்பாக தலையசைக்க அபி "ஏன் டி பேச வேணான்னு சொல்ர அவன் பக்கம் நம்ம தான பேசனும்" என்று கூற
KAMU SEDANG MEMBACA
உன் நிழலாக நான்
Romansaஎதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.