அபி கோவமாக காரை எடுத்துக் கொண்டு நிஷாவை தேடி செல்ல மேகா அபிக்கு தெரியாமல் அபியை ஒரு ஆட்டோவில் பின் தொடர்ந்தாள். அபி வீட்டில் இருந்த அனைவரும் மித்ரன் பிரச்சனை தீர்ந்ததும் கிளம்பி விட இப்பொழுது அங்கு மித்ரன் ஹர்ஷன் விதர்ஷன் ஆதர்ஷ் அபி பெற்றோர் தாத்தா பாட்டி மட்டும் இருந்தனர்.
சிவகாமி பாட்டி மித்ரன் அருகில் அமர்ந்து "நீ செஞ்சது சரி தான மித்ரா அப்பறம் ஏன் இப்படி இருக்க பிரச்சனை முடிஞ்சது அடுத்து கல்யாண வேலை செய்ய தொடங்கு" என்று கூற மித்ரன் "பிரச்சனை முடிஞ்சது பாட்டி ஆனா இத யார் பன்னி இருப்பா என் வாழ்கைய அழிக்கனுன்னு யார் நினைச்சிட்டு இருக்கா எனக்கு எதும் புரியல" என்று கவலையாகவும் குழப்பமாகவும் கூற பாட்டி "அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம் இப்ப டென்ஷன விட்டுட்டு போ போய் வேலைய பாரு" என்று கூறியவர் அவன் தலையை தடவி விட்டு எழுந்து உள்ளே சென்று விட்டார்.
மித்ரன் அப்படியே அமர்ந்திருக்க அவனிற்க்கு ஒரு புறம் விதர்ஷனும் மறு புறம் ஹர்ஷனும் அமர்ந்துக் கொண்டனர் அதர்ஷ் அலுவலகம் சென்று விட்டான். "ஆமா அபி எங்க போனான்" என்று விதர்ஷன் கேட்க ஹர்ஷன் "வருவான் டா வந்த அப்பறம் கேட்டுப்போம்" என்று கூற மூவரும் அமைதியாக அமர்ந்தனர்.
அபி கார் நேராக நிஷா வீட்டின் முன் சடன் ப்ரேக் போட்டு நின்றது மேகா ஆட்டோகாரரிடம் அந்த காரிற்க்கு சற்று நிறுத்த கூற அவரும் நிறுத்தினார் மேகா ஆட்டோவில் இருந்து அபியை பார்க்க அபி கோவமாக இறங்கி கார் கதவை அறைந்து சாற்றியவன் வேக எட்டுக்களுடன் உள்ளே சென்றான். மேகாவும் அவசரமாக இறங்கி ஆட்டோவிடம் பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு அபியை பின் தொடர்ந்து சென்றாள்.
எங்கு அவன் இருக்கும் கோவத்தில் நிஷாவை எதாவது செய்து விடுவானோ என்ற பதட்டம் மேகா மனதில் அதிகமாகவே இருந்தது அதனாலே அவன் கோவமாக வெளியில் வந்ததும் மேகாவும் அவனுடன் கூடவே பின் தொடர்ந்து வந்தாள்.
நிஷா தன் வேலையை முடித்ததும் விதார்திடம் கூற விதார்த் செய்தியை பார்த்த ஆனந்தத்தில் விதார்த் நிஷாவை உடனே பார்க்க வேண்டும் என்று அவளை ஓர் காபி ஷாப்பிற்க்கு அழைக்க நிஷாவும் தன் மனம் கவர்ந்தவனை காண வேகமாக கிளம்பி சென்று விட்டாள்.
VOCÊ ESTÁ LENDO
உன் நிழலாக நான்
Romanceஎதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.