ஜெய் மேகாவோட தம்பி அவன் ஒரு டாக்டர் நம்ம மேகா ஒரு இஞ்சினியர்.
விஷானிக்கு மேகா சுளுக்கு எடுத்து விட்டதால் நால்வரும் பதறி விட்டனர். அபி "குட்டி மா வாடா ஹாஸ்பிடல் போலாம் இவள நம்பி உன் கால அவ கிட்ட கொடுத்துட்டோமே வா போலாம்" என்று எழுந்து விஷானியை எழுப்ப செல்ல ஹர்ஷனும் எழுந்து "சீக்கிரம் டா" என்று கூற விதர்ஷன் "ஏன் மா மேகா இத முன்னாடியே சொல்ல மாட்டியா குட்டிமாக்கு மட்டும் எதாவது ஆச்சி உன்னை என்ன பன்னுவனே தெரியாது" என்று கோவமாக கூற மித்ரன் மட்டும் அமைதியாக ஜெய் மேல் உள்ள கோவத்தில் அமர்ந்து இருந்தான்.
ஜெய் இவர்களின் பேச்சில் குழம்பி "என்ன ஆச்சி ஏன் இப்படி எல்லாம் சொல்ரிங்க" என்று கேட்க அபி நடந்ததை கூற ஜெய் "அட அதுக்கா இப்படி அவசரபட்றிங்க அதெல்லாம் ஒன்னும் ஆகாது என்னை விட அவ நல்லவே ட்ரீட்மென்ட் பன்னுவா கவலை படாதிங்க உங்க தங்கச்சி காலுக்கு எதும் ஆகாது அதுக்கு நா பொறுப்பு உங்களுக்கு நம்பிக்கை வரலனா இருங்க நா பாக்கறன்" என்று கூற மூவரும் அமைதியாகினர்.
"எனக்கும் பஸ்ட் எய்ட் தெரியும் சாரி நா உங்க தங்கச்சிக்கு நா டாக்டர் இல்லன்னு சொல்லாம ட்ரீட் பன்னதுக்கு" என்று மேகா பொதுவாக கூறியவள் விதர்ஷனிடம் "நீங்க நம்ம மேகா சிஸ்டர்ன்னு முன்ன சொன்ன அப்போ எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா இப்போ நீங்க உங்க தங்கச்சிக்கு எதாச்சி ஆச்சினா என்ன செய்வனே தெரியாதுன்னு சொன்னிங்க இல்ல கஷ்டமா இருக்கு பரவால்ல விடுங்க" என்று கூறியவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு புன்னகைத்தாள்.
விதர்ஷனிற்க்கு மேகாவின் பேச்சு வருத்தத்தை கொடுக்க "மேகா நா குட்டிமாக்கு எதாவது ஆகிறுமான்ற டென்சன்ல தான் அப்படி சொல்லிட்டன் சாரி டா" என்று கூற மேகா "பரவால்ல அண்ணா விடுங்க" என்று புன்னகைத்தாள்.
ஜெய் "அட விடுங்க சார் அவ சரி ஆகிருவா இன்னும் கொஞ்ச நேரத்துல அவ இப்படி தான் அடிக்கடி எமோஷனல் ஆகிருவா" என்று கூறி விஷானி காலை பற்றி பார்த்தான்.
YOU ARE READING
உன் நிழலாக நான்
Romanceஎதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.