அடுத்த நாள் காலை விதர்ஷனும் மித்ரனும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு படுத்திருக்க விஷானி எழுந்து சோபாவில் உறங்கி இருக்க மேகா அபியின் மார்பில் அழுத்தமாக முகத்தை புதைத்து படுத்திருக்க அபி மேகாவை சுற்றி கையை போட்டு அணைத்தவாறு உறங்கியிருந்தான்.
முதலில் அபி விழித்துக் கொள்ள அவன் மேல் தூங்கும் அவன் நிலாவை இன்னும் இறுக்கி அணைத்தவன் புன்னகையுடன் கீழே பார்க்க சரியாக அவன் இடை அருகில் கட்டிக் கொண்டு உறங்கியிருந்த மித்ரனையும் விதர்ஷனையும் கண்டவன் தன் காலை மடக்கி கால் முட்டியால் மித்ரன் முதுகில் உதைக்க மித்ரன் வலி தாங்காமல் பதறி எழுந்தான்.
தன்னை உதைத்தது அபி தான் என்று தெரிந்துக் கொண்டவன் அபியை முறைக்க அபி "அவனையும் எழுப்பு" என்று சத்தமே வராமல் வாயசைத்தான். "என்ன டா" என்று மித்ரன் புரியாமல் கண்ணை சுருக்கி கேட்க அவன் சத்தத்தில் மேகா சினுங்கி அவள் முகத்தை அபி மார்பில் தேய்த்தாள்.
அபி அதை கண்டு மித்ரனை முறைத்தவன் "அவனை எழுப்பு டா" என்று சிறிது சத்தமாக கூற மித்ரன் "அத சத்தமா தான் சொல்லி தொலையேன்" என்று கடுப்பாக சற்று சத்தமாக கூற அபி மித்ரனை எட்டி மிதிக்க மித்ரன் கட்டில் மேலிருந்து உருண்டு கீழே விழுந்து அம்மா என்று அலறினான்.
மித்ரனின் அலறலில் மேகாவும் விதர்ஷனும் விழித்துக் கொள்ள இருவரும் எழுந்து மித்ரனை பார்த்து பதறி தூக்கி கட்டில் மேல் அமர வைத்தனர்.
"என்ன அண்ணா அடி எதாவது பட்டுச்சா மெதுவா எழுந்திருக்கலாம் இல்ல இப்ப பாருங்க கீழ விழுந்துட்டிங்க" என்று மேகா அவனிற்க்கு எங்காவது அடிப்பட்டிருக்கா என்று அவன் கை கால்களை ஆராய்ந்தவாறு கூற
"நா எங்க மா விழுந்தன் உன் புருஷன் தான் உதைச்சி கீழ தள்ளிட்டான்" என்று மித்ரன் அபியை முறைத்தவாறு கூற அபியும் மித்ரன் சத்தம் போட்டதால் அவனை முறைத்துக் கொண்டே "எருமை எருமை நீ சத்தம் போட்டன்னு தான எட்டி ஒதைச்சன் விழுந்தும் சத்தம் போட்ற அறிவு கெட்டவனே" என்று திட்டினான்.
YOU ARE READING
உன் நிழலாக நான்
Romanceஎதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.