நிழல் - 15

1.3K 67 7
                                    

மித்ரன் காதல் வழிய ஆருஷாவை பார்த்துக் கொண்டிருக்க ஆருஷா வெட்கி மித்ரனை தள்ளி விட மித்ரன் பின்னால் சாய ஆருஷாவும் அவனுடன் சேர்ந்து அவன் மேல் விழ இருவரையும் புல் தரை தன் மடியில் தாங்கியது.

ஆருஷா அதிர்ச்சியாக "நம்ம தான தள்ளி விட்டோம் நம்மலே எப்படி அவர் மேல விழுந்தோம்" என்று யோசிக்க மித்ரன் ஆருஷா தள்ளியதும் அவளை இடையோடு சேர்த்து அணைத்துக் கொள்ள ஆருஷாவும் அவனுடனே விழுந்தாள். ஆருஷா கோபமாக நிமிர்ந்து மித்ரனை பார்க்க மித்ரன் கள்ள சிரிப்புடன் ஆருஷாவை பார்த்துக் கொண்டிருந்தான்.

"எத்தனை படம் நா பார்த்திருக்கன் எத்தனை படம் நா டைரக்ட் பன்னி இருக்கன் எனக்கேவா" என்று கேட்டு மித்ரன் ஆருஷாவை பார்த்து கண்ணடிக்க ஆருஷா கோவமாக எழுந்து நின்று முறைத்தாள்.

மித்ரன் சிரித்துக் கொண்டே "ரொம்ப முறைக்காத கண்ணு வெளில வந்தர போகுது" என்று கூற ஆருஷா திரும்பி மேகாவை நோக்கி நடக்க இரண்டு அடி நகர்ந்தவள் மீண்டும் நின்று திரும்பி பார்த்தாள்.

மித்ரன் என்ன என்று புருவம் உயர்த்தி கேட்க ஆருஷாவின் கண்கள் அவன் கழுத்து சங்கிலியில் பதிந்திருந்தது. மித்ரன் அதை புரிந்துக் கொண்டு திருட்டு விழி விழித்துக் கொண்டு "அபி கூப்ரான் என்னன்னு கேட்டு வரன்" என்று ஆருஷாவை கடந்து செல்ல போக ஆருஷா மித்ரனின் பின் கழுத்து பனியனை பிடித்து இழுத்து அவன் நின்ற இடத்தில் நிற்க வைத்து விட்டு "நகந்த கால உடைப்பன்" என்று கூறி அவன் செயினை கையில் பிடித்து பார்த்தாள்.

"இது என்னோடது தான உன் கிட்ட எப்படி வந்தது" என்று ஆருஷா மித்ரனை பார்த்து கேட்க மித்ரன் "அன்னைக்கு உன்னை உன் வீட்ல விட வந்தோம் இல்ல அப்ப என் கையோட வந்திருச்சி சரி உன் ஞாபகமா இருக்கட்டுமேன்னு செய்ன்ல மாட்டி போட்டுக்கிட்டன்" என்று கூற

"ஓஹோ சரி கழட்டி கொடுங்க" என்று ஆருஷா கேட்க மித்ரன் அதிர்ந்து "இல்ல என் கிட்டையே இருக்கட்டுமே ப்லீஸ்" என்று கெஞ்சும் குரலில் கேட்க ஆருஷாவிற்க்கு அவன் கெஞ்சல் குரலில் மறுக்க தோன்றவில்லை சரி என்று அவனை விட்டவள் மேகாவை நோக்கி சென்றாள்.

உன் நிழலாக நான்Tahanan ng mga kuwento. Tumuklas ngayon