நிழல் - 24

1.1K 62 6
                                    

நிஷா மேகா கையை பிடித்து வெளியில் இழுத்து செல்ல போக மேகாவின் மற்றொரு கையை பிடித்து நிஷா இழுக்காதவாறு சிவகாமி பாட்டி பிடித்துக் கொண்டார். நிஷா பாட்டியை பார்க்க பாட்டி "மேகா என்னோட கெஸ்ட் அவள அவமான படுத்தறது என்னை அவமான படுத்தற மாதிரி" என்று கூற நிஷா "கிழவி எனக்கும் அபிக்கும் கல்யாணம் ஆகட்டும் அப்பறம் இருக்கு உனக்கு கோவப்படாத நிஷா இவள அப்பறம் பார்த்துக்கலாம்" என்று நினைத்தவள் மேகா கையை விட்டு நகர்ந்து செல்ல பாட்டி "நிஷா மேகா கிட்ட சாரி கேளு" என்று கூற நிஷாவிற்க்கு மேகா மேல் இன்னும் கோபம் அதிகமானது.

நிஷா கோபத்தை அடக்கிக் கொண்டு சாரி என்று கூறி விட்டு உள்ளே சென்று விட நிஷாவின் பெற்றோர் பாட்டியிடமும் மேகாவிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு அமர வைத்தனர். அபி ஏக்கமாக மேகாவை பார்க்க மேகா அங்கு அபி என்று ஒருவன் இருக்கிறான் என்றே கவனிக்காதது போல் பாட்டி அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

அதன் பின் பாட்டி குடும்ப ஜோசியரை வர சொல்லி இருப்பதாக கூற அவரும் வந்து சேர்ந்தார். அபி ஜாதகமும் நிஷா ஜாதகமும் ஒன்றாக வைத்து பார்த்து விட்டு "ஜாதகம் பொருந்தல மா இரண்டு ஜாதகமும் சேர்ந்தா வீட்டுக்கு நல்லது இல்ல அதும் இல்லாம பொண்ணுக்கு தாலி தங்கறது கஷ்டம்" என்று கூற நிஷா பெற்றோர் அதிர்ந்து "என்ன சாமி இப்படி சொல்லிட்டிங்க" என்று கேட்க பாட்டியோ "கொஞ்சம் நல்ல பார்த்து சொல்லுங்க சாமி பசங்க ஆசப்பட்டுட்டாங்க ஜாதகம் காரணம் சொல்லி அவங்கள பிரிக்க வேணா எதாவது பரிகாரம் இருந்தா பார்த்து சொல்லுங்க" என்று கூற

ஜோசியரும் சிறிது நேரம் ஏதேதோ புரட்டியவர் இறுதியாக "ஒன்னு பன்னுங்க மா கல்யாண பொண்ணுக்கு செய்ற தாலிய விட ஒரு கிராமோ இல்ல ஒரு சவரனோ அதிகமா செஞ்சி அந்த பொண்ணு மாங்கல்யம் நிலைக்கனுன்னு மனசார வேண்டிகிட்டு ஊருக்கு வெளியில ஒரு அம்மன் கோவில் இருக்கு அங்க அந்த அம்மன் கழுத்துல சாத்துங்க மத்தத எல்லாம் அந்த அம்மன் பார்த்துப்பா" என்று கூற "சரிங்க சாமி நீங்க சொன்ன மாதிரியே பன்றோம்" என்று சரோஜா கூற ஜோசியர் கிளம்பி விட்டார்.

உன் நிழலாக நான்Tempat cerita menjadi hidup. Temukan sekarang