சின்ட்டு முகத்தை மறைத்துக் கொண்டு அபி ஹர்ஷன் விதர்ஷன் மித்ரன் நால்வரும் சாப்பிட்டு வைத்த பாக்ஸை எடுக்க போக அவளை வழி மறைத்தவாறு நால்வரும் நின்றிருந்தனர். சின்ட்டு அதிர்ந்து நால்வரையும் பார்த்தவள் தப்பிக்க வழியை தேடிக் கொண்டு யோசனையாக தலையை கவிழ்ந்து நிற்க அபி அவள் பின்னிருந்து அவள் முகத்தை மறைத்தவாறு கட்டி இருந்த ஷாலை கழட்டினான்.
சின்ட்டு அதை உணர்ந்து அபியை திரும்பி பார்த்தவள் அவன் ஷாலை முழுதாக அவிழ்க்கும் முன்பாகவே அவனை தள்ளி விட்டு ஓட நால்வரும் சுதாரித்து அவள் பின் ஓட சின்ட்டு வேகமாக சென்று பெண்கள் கழிவறைக்குள் நுழைந்துக் கொண்டாள். நண்பர்கள் நால்வரும் அவள் கழிவறைக்குள் சென்றதை கண்டு சடன் ப்ரேக் போட்டு நின்று விட்டனர்.
"எப்படியும் வெளியில வந்து தான ஆகனும்" என்று நினைத்த அபி முவரையும் அங்கேயே நிற்க்குமாறு கூற நால்வரும் கழிவறை வாயிலை பார்த்தவாறே நின்று விட்டனர். சில பெண்கள் நால்வரையும் கேவலமாக பார்த்து விட்டு செல்ல சிலர் திட்டி விட்டு செல்ல சிலர் முகத்தை சுழித்துக் கொண்டு சென்றனர் இவை எல்லாம் கண்ட விதர்ஷன் "டேய் அபி எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்க டா அதும் இல்லாம திட்டிட்டு வேற போராளுங்க நம்ம அப்படி பட்ட பசங்களா டா ப்லீஸ் டா வா டா அப்படிகா போய் வெய்ட் பன்னலாம்" என்று மூவரையும் சற்று தூரமாக அழைத்துக் கொண்டு சென்று நின்றான்.
உள்ளே சென்ற சின்ட்டு மூச்சு வாங்கி தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தவள் வேறொரு உடையை மாற்றிக் கொண்டு கண்ணாடி அணிந்துக் கொண்டு வெளியில் வந்தாள் (எனக்கும் கண்ண மட்டும் தான் பா காமிச்சா முகத்தை காமிக்கல) எப்படியும் அவர்கள் வெளியில் தான் இருப்பார்கள் என்று யூகித்தவள் அவர்களுக்காக கடிதத்தை எழுதி கையில் வைத்துக் கொண்டவள் கேஷுவலாக வெளியில் சென்றாள்.
சின்ட்டுவின் ஆடையை மட்டும் அடையாளமாக வைத்து தேடிக் கொண்டிருந்த நண்பர்கள் அவளை கண்டு அவள் இல்லை என்று முடிவுக்கு வந்து அவளை தொல்லை செய்யாமல் விட்டு விட சின்ட்டுவும் வாய்க்குள்ளே சிரித்து விட்டு அவர்களை கடந்து சென்று விட்டாள். சிறிது தூரம் சென்றவள் நால்வரையும் திரும்பி பார்த்து புன்னகைத்து விட்டு கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்து அதில் அவள் எழுதிய கடிதத்தை சுற்றியவள் குறி பார்த்து அபி மேல் அடித்து விட்டு மின்னலாய் அங்கிருந்து ஓடி மறைந்து விட்டாள்.
YOU ARE READING
உன் நிழலாக நான்
Romanceஎதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.