அபி சலிப்புடன் ஒரு காப்பி ஷாப்பில் நுழைய அங்கு கடைசி மேசையில் ஓர் பெண் அபிக்கு முதுகு காட்டியபடி அமர்ந்திருக்க அவளை நோக்கி அபி செல்ல போக காப்பி ஷாப்பில் இருந்தவர்கள் அபியை கண்டு ஆட்டோக்ராப் வாங்க அவனை சூழ்ந்துக் கொள்ள சலசலப்பு கேட்டு அப்பெண் அபியை திரும்பி பார்த்து விட்டு புன்னகைத்து விட்டு திரும்பி விட்டாள் கூட்ட நெரிசலில் அபிக்கு அப்பெண்ணின் முகம் தெரியவில்லை ஆனால் அவள் திரும்பி பார்த்தது மட்டும் அவனிற்க்கு தெரிந்தது ஒரு வழியாக அனைவருக்கும் கையெழுத்து இட்டவன் அவர்களிடம் இருந்து விலகி அப்பெண்ணை நோக்கி சென்றான்.
சிவகாமி பாட்டி அபிக்கு பெண் பார்த்திருப்பதாக கூற அபி வேண்டாம் என்று மறுக்க பாட்டி ஏதேதோ கூறி அவனை சம்மதிக்க வைத்து இன்று அப்பெண்ணை பார்த்து வர சொல்லி அனுப்ப அபியும் இத்திருமணம் வேண்டாம் என்று அப்பெண்ணிடமே கூறிவிடலாம் என்று அவளை காண சென்றான்.
ஹர்ஷன் விதர்ஷன் மித்ரன் மூவரும் அவரவர் அலுவலகம் செல்ல விஷானி தன் தோழி வினியை அழைத்துக் கொண்டு ஜெய்யை பார்க்க சென்றாள்.
மித்ரன் அலுவலகத்தில் படபிடிப்பு முடித்த படத்தை எடிட் செய்ய ஸ்டுடியோ செல்ல போக அவன் பி.ஏ வந்து யாரோ ஒரு பெண் அவனை காண வந்திருப்பதாக கூற மித்ரன் தன்னிடம் சான்ஸ் கேட்டு தான் வந்திருப்பதாக எண்ணி வெய்ட் பன்ன சொல்லு என்று கூற அவனும் சென்று விட்டான்.
மித்ரன் கைப்பேசி சினுங்க அதில் ஆருஷா எண்ணை காண்பிக்க மித்ரன் கோவத்தில் அழைப்பை துண்டிக்க அடுத்து அவன் கைப்பேசி பீப் சத்தம் எழுப்ப மித்ரன் எடுத்து பார்க்க அதில் ஓர் புகைப்படம் வந்திருக்க மித்ரன் அதை திறந்து பார்க்க ஆருஷா அவன் அலுவலகத்தில் இருந்து புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தாள் அதோடு நான் கிளம்பறன் என்ற குறுஞ்செய்தியும் இருக்க மித்ரன் அடித்து பிடித்துக் கொண்டு வெளியில் ஓடினான்.
அங்கிருந்த அனைவரும் மித்ரனை ஒரு மாதிரி பார்க்க மித்ரன் அது எதையும் கவனிக்கும் நிலமையில் இல்லை அவன் எண்ணம் முழுதும் ஆருஷாவை தடுக்க வேண்டும் என்று தான் இருந்தது. ஆருஷா வெளியில் செல்ல போக மித்ரன் மூச்சிரைக்க ஓடிச் சென்று அவள் முன் நின்றான்.
YOU ARE READING
உன் நிழலாக நான்
Romanceஎதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.