அபி விதர்ஷனிடம் பேசி விட்டு உள்ளே சென்றவன் கண்ணில் மேகாவும் ராஜும் அணைத்திருப்பதை கண்டவன் கோவமாக அவர்கள் அருகில் சென்றான்.
அபி கோவமாக வருவதை கண்ட மேகா ராஜிடம் அவன் கோபத்தை காட்டும் முன் "யுகி இது யார்ன்னு தெரியுமா விமல் அண்ணா டைரக்டர் இவர் கிட்ட தான் நா அஸிஸ்டென்ட்டா வேலை பாக்கறன்" என்று கூறி அண்ணா என்ற வார்தையை மட்டும் அழுத்தி கூறினாள்.
அபிக்கு அவள் அவனை அண்ணா என்றதோடு அவன் பெயர் வேறேதோ கூற அதில் குழம்பியவன் விமல்லா என்று புருவம் முடிச்சிட கேட்க அதற்க்கு மேகா பதில் கூறும் முன் ராஜ் "என் புல் நேம் விமல்ராஜ் சார்" என்று கூற
அபி அவனை பார்த்து விட்டு மேகாவிடம் திரும்பி "அவர் கிட்ட எப்ப இருந்து வேலை செய்ர ஏன் என் கிட்ட சொல்லல" என்று கேட்க மேகா "அத பத்தி அப்பறம் சொல்ரன் இப்ப அண்ணன் கிட்ட பேசிட்டு இரு நா போய் காபி எடுத்துட்டு வரன்" என்று கூறி விட்டு உள்ளே சென்று விட அபியும் அப்பறம் கேட்டுக் கொள்ளலாம் என்று அமர்ந்து விமலிடம் கதை கேட்க தொடங்கினான்.
ஜெய் குரு விஷானி வினி நால்வரும் காபி ஷாப்பில் அமர்ந்து இருக்க வினிக்கு ஒரு குறுஞ்செய்தி வர அதை யார் அனுப்பினார்கள் என்று கேட்டவர்களிடம் தான் காதலிப்பவர் என்று கூற விஷானி அதிர்ந்து வினியை பார்க்க ஜெய்யும் குருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"அடிப்பாவி இத்தனை வருஷமா என் கூட தான டி இருந்த எப்ப இருந்து லவ் பன்ற" என்று விஷானி ஆச்சர்யம் குறையாமல் கேட்க வினி "அது ஸ்கூல்ல இருந்து" என்று கூற விஷானி வாய் மேல் கை வைத்துக் கொண்டாள். ஜெய்யும் குருவும் இருவரும் பேசுவதை மௌனமாக தலையை குனிந்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தனர்.
"விஷானி நீ யாரையும் லவ் பன்னலையா" என்று ஜெய் கேட்க விஷானி ஒரு நிமிடம் ஜெய்யின் முகத்தை பார்த்தவள் அதில் எதுவும் அவளால் கண்டு பிடிக்க இயலவில்லை. "அது இல்லை" என்று கூற ஜெய் சரி என்று அமைதியாகினான். குரு வேலை இருப்பதாக கூறி எழுந்து செல்ல ஜெய்யும் அவனுடனே கிளம்பி விட்டான்.
KAMU SEDANG MEMBACA
உன் நிழலாக நான்
Romansaஎதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.