அபி மேகாவை இழுத்து முத்தமிட மேகா கண்களை இறுக்கி மூடியவாறு இருக்க அவள் விழிக்குள் அபியை மறைந்திருந்நநு தூரத்தில் இருந்தே பார்த்து ரசித்து காதலித்தது படமாக அவள் விழிக்குள் ஓடியது.
இறுதியாக அவன் ஜெய்யை கட்டாயப்படுத்திய நிகழ்வு அவள் கண்முன் வரவே பட்டென கண்களை திறந்தவள் ஒரே மூச்சில் அபியை தள்ளி விட்டவள் ஓங்கி ஒரு அரை அபி கன்னத்தில் அடித்தாள்.
அபி கன்னத்தில் கை வைத்துக் கொண்டு மேகாவை பார்க்க மேகா "ஏன் டா இப்படி பன்ன ஏன் இப்படி பன்ன நா உன்னை எவ்வளவு காதலிச்சன் தெரியுமா ஆனா நீ உன் தங்கச்சிக்காக என்னை விட்டு கொடுக்க துணிஞ்சிட்ட இல்ல நா உனக்கு முக்கியம் இல்லை இல்லை இப்ப எதுக்கு இங்க வந்த ஏன் வந்த போய்டு என்னை விட்டு போய்டு எனக்கு நீ வேணா போ" என்று கோபம் குறையாமல் அபியை போட்டு அடித்துக் கொண்டே கத்தினாள்.
அபி கண்கள் கலங்கி விட அமைதியாக மேகாவின் அடிகளை வாங்கியவன் அவளையே பார்த்திருந்தான்.
"நீயும் தான நிலா இப்போ உன் தம்பிக்காக என்னை விட்டு பிரிஞ்சி வந்திருக்க அப்போ உனக்கு நா முக்கியம் இல்லையா" என்று அபி கேட்க
"இல்லை இதுக்கு முன்ன உன்னை என் உயிரா நினைச்சன் ஆனா நீ எப்போ உன் அக்கா நல்லா இருக்கனுன்னா நீ என் தங்கச்சிய கல்யாணம் பன்னிக்கனுன்னு என் தம்பி கிட்ட சொன்னன்னு தெரிஞ்சதோ அப்போவே நீ எனக்கு முக்கியம் இல்லை டா நா உன்னை விட்டு பிரிஞ்சது என் தம்பி வாழ்க்கைகாக தான் ஆனா நீ மட்டும் அந்த வார்த்தைய சொல்லாம இருந்திருந்தா நா உன் கூடவே இருந்து எல்லாத்தையும் சரி பன்னி இருப்பன் டா எனக்கு என் தம்பியும் முக்கியம் நீயும் முக்கியம் உங்க இரண்டு பேரையுமே இழக்கனுன்னு நா என்னைக்கும் நினைச்சதில்லை" என்று மேகா கூற
"சரி டி நா பன்னது தப்பு தான் மன்னிச்சிறு டி ப்லீஸ் நிலா என்னை மன்னிச்சிறு டி" என்று அபி கூற
"நீ கல்யாணத்துக்கு முன்னை என்னை விட மாட்டன் விட மாட்டன்னு சொல்லும் போதெல்லாம் உன் மனசுல நா இருக்கன் நீ என்னை காதலிக்கிறன்னு நினைச்சிட்டு இருந்தன் டா ஆனா இல்லை நீ என்னை காதலிக்கல அதனால தான் விட்டு கொடுக்க துணிஞ்சிட்ட என்ன சொன்ன மன்னிக்கனுமா உன்னை மன்னிக்க நா ஒன்னும் உன் மேல கோவமா இல்ல எனக்கு உன் மேல இருந்த நம்பிக்கை போச்சி இதுக்கு அப்பறம் வேற எதாவது பிரச்சனைல எங்க என்னை விட்டு போய்டுவியோன்னு பயம் வந்துருச்சி அந்த பயத்தோட என்னால உன் கூட வாழ முடியாது என்னை விட்று" என்று மேகா அழுகையுடனே கூறி முடித்தாள்.
ESTÁS LEYENDO
உன் நிழலாக நான்
Romanceஎதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.