நிழல் - 3

1.9K 87 12
                                    

அபி காட்டை நோக்கி செல்ல மற்றவர்கள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். அபி சிறிது தூரம் காட்டிற்க்குள் சென்று பார்த்து விட்டு திரும்ப செல்லலாம் என்று திரும்ப தான் வந்த வழி எது என்று தெரியாமல் போக அங்கேயே நின்று சுற்றி முற்றி எங்காவது வழி இருக்கிறதா என்று தேடினான்.

எங்கும் வழி தெரியாமல் போக அபி கால் போன போக்கில் செல்ல அது காட்டிற்க்குள் செல்லும் வழியாக போனது. சிறிது தூரம் சென்றவனுக்கு கால் வலி எடுக்க ஒரு மரத்தடியில் அமர்ந்து மூச்சு வாங்கிக் கொண்டிருக்க அவனிற்க்கு பக்கவாட்டில் ஒரு கை தண்ணீர் பாட்டிலை நீட்ட அபி இருந்த கலைப்பிலும் தாகத்திலும் எதையுமே உணராமல் தண்ணீரை வாங்கி குடித்து விட்டு "தாங்க்ஸ்" என்று திருப்பி கூறி அதை கொடுத்தவன் அப்பொழுது தான் உணர்ந்தான் தன் அருகில் யாரோ இருப்பதை உடனே திரும்பி பார்க்க அவன் அருகில் ஜீண்ஸும் டாப்பும் அணிந்து கழுத்தை சுற்றிய ஷாலை அணிந்து ஒரு கைப்பையை தோலில் மாட்டிக் கொண்டு கையை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டே அபியை பார்த்து புன்னகையுடன் நின்றிருந்தாள் நம் நாயகி "மேகநிலா"

அபி அவளை நிமிர்ந்து பார்த்து விட்டு எழுந்தவன் பயத்தில் இரண்டு அடி பின்னே நகர்ந்து அவள் முன் ஆள்காட்டி விரலை நீட்டி "நீ நீ யா... ர் இ..ங்..க எப்...ப..டி" என்று திக்கி தினறி கேட்க

மேகாவிற்க்கு அவன் பயத்தை கண்டு சிரிப்பு வந்து விட சிரித்துக் கொண்டே "ஹீரோ சார் பயபடாதிங்க நானும் மனுஷி தான் பேய் பிசாசு எல்லாம் இல்லை" என்று கூற

அபியின் படபடப்பும் பயமும் சற்று குறைந்தாலும் அவன் சந்தேகம் தீராமல் அவளை சந்தேகமாக பார்க்க மேகா சத்தமாக சிரித்து விட்டு "பயப்படாதிங்க சார் நா உங்கள எதும் பன்னிர மாட்டன்" என்று கூறி அவன் அருகில் செல்ல அபி பின்னடைந்தான்.

"நீ காட்டுக்குள்ள என்ன பன்ற" என்று அபி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்க

"சுற்றி பார்க்க வந்தன் நீங்க எதுக்கு வந்திங்க" என்று மேகா அபியை கேள்வி கேட்க

உன் நிழலாக நான்Où les histoires vivent. Découvrez maintenant