மை டியர் 1

2.6K 29 183
                                    

புகழ் பெற்ற ஸ்கூல், ஒழுக்கம், அமைதி, கல்வினு எல்லா விதத்திலும் பெஸ்ட் ஸ்கூல் என்று, போன வருஷம்ன்தா பேர் வாங்கிச்சி. அதைக் கெடுக்க ஒருசில அடங்காத பசங்க இருப்பாங்கனு நம்ம கேள்விப் பட்டு இருக்கோம். ஒன்னு இல்ல ரெண்டு அடங்காத ராட்சசிங்க இருக்காங்க. பசங்களே தோத்து போய்டுவாங்க அவளோ அட்டகாசம், இதுங்க ரெண்டும் ஒன்னா சேந்தா தான் ராகலேயே. தனியா இருந்தா ஸ்கூலே அமைதியா இருக்கும்.

தாமரை.... அழகான வட்ட முகம், அவளது அமைதியைக் கண்டு வியக்காதவர்கள் யாருமே இல்ல, சுண்டி இழுக்கும் நிறம் அப்படியே அவளது அம்மாவைப் போல. இவளுக்கு நேரெதிராக இவளது ரெட்டை சகோதரி அட்டகாசம், அராத்து, கொஞ்சம் இவளை விட நிறம் குறைவு. கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, ஹெல்த் ப்ரோப்லேம், இயல்பா கொஞ்சம் கேர் இவ மேல ஜாஸ்தி.. அதனால் வந்த பிடிவாதம் இவளுக்கு நிறைய, ஆனால் அது குடும்பத்தில் மட்டும்.

பத்தாம் வகுப்பு படிக்கும் தாமரை, பன்னிரண்டாம் வகுப்பு நோக்கி வேகமாக ஓடி வரா..

"மிஸ் ஆகாஷ் அண்ணன் எங்க" என்றாள் பதட்டமாக மூச்சு வாங்கிக் கொண்டு.

"ஆகாஷ் உன் தங்கச்சி வந்து இருக்கா பாரு" மிஸ் கொடுத்த கணக்கை ஆர்வமாகப் போட்டு இருந்தவன் திரும்பிப் பார்த்தான் அவனது தங்கச்சியை.

"என்னாச்சி, தாமரை இப்படி ஓடி வந்து இருக்க".

"அண்ணா வாணியும் மல்லியும் திரும்பச் சண்டை போட்டுவிட்டு இருகாங்க".

"எங்க" என்றான் ஆகாஷ்.

"கிரௌண்ட்ல" என்றாள்.

"இவளுக்கு இதே வேலையா போச்சி ஒன்னு இவளுங்க ஸ்கூல மாத்தனும் இல்லனா நா ஸ்கூல் மாத்திட்டு போனும், சரியான இம்சைங்க" ஆகாஷ் வேகமா நடந்துட்டே ரெண்டு அறிவாளியையும் திட்டிட்டே போறான்.

"யார் பாத்துடி கருப்பினு சொன்ன, மவளே உன்ன அடிக்கிற அடியில் யாரு கருப்பா ஆவராங்க பாரு" என்று வாய் சண்டை கை சண்டையாய் ஆகும் நேரத்தில் ஆகாஷ் வந்து நின்றான் ரெண்டு பேருக்கு நடுல .

மை டியர் சண்டக்கோழி Where stories live. Discover now