25 mds
க்ரிஷ் அனைவரையும் ஒதுக்கிவிட்டு முன்னே செல்ல, ஆகாஷ் கண்ணன் பின்னாடியே ஓடிச் சென்றார்கள், இவர்கள் வேகத்தை விட மீரா இரண்டு மடங்காக ஓடினாள். கண் சிமிட்டும் முன்பு அந்த கருப்புக் காளை மிரட்டும் கண்களோடு நிற்க, ரித்திகா ஒரு புறம் மயங்கி சரிய, கவின் அவளைப்பிடித்து, சாரா கையிலே மயங்கியவளை குடுத்துவிட்டு, இவன் மாட்டின் பக்கம் ஓடினான்.
"மீரா குட்டி அங்கு போகக் கூடாது, இங்க வா நான் வேற மாட்டுக்கிட்ட கூட்டிட்டு போறேன்" கவின் பேசிக்கொண்டு இருக்கும் போதே குரல் உடைந்து அழுதுவிட்டான்.
எல்லோரும் பயப்படுவதற்க்கு ஒரு காரணம் உண்டு, ஆகாஷ் மட்டும்தான் அந்த காளையை பார்த்துப்பாங்க. மத்தவங்க யாரும் தூரத்தில் இருந்துகூட அந்த கருப்பன் கண்ணில் படக்கூடாது, பட்டுவிட்டால் அவன் ஆடும் ஆட்டம் மிரள வைக்கும்.
கருப்பன் மீரா குட்டி அருகில் வருவதை பார்த்து அவனின் கூரிய இரு கொம்புகளை வைத்து முட்ட நினைக்கும் அந்த நொடியிலே, அங்கு இருக்கும் அனைவர் உயிரும் பாதி பிரிந்தது படபடப்பில்,
க்ரிஷ் கண்ணன் ஒரு புறம், "இங்க மாமா கிட்டவா என் செல்லத்தை தூக்கிப் போட்டு பிடிக்கிறேன்" என்று எது சொல்லியும் வேலைக்கு ஆகல, மீரா என்ன நினைத்தாளோ ஓடிச் சென்று குணியும் கருப்பன் கொம்பைப் பிடித்து ஆட்டத் துவங்க.
இங்கு அனைவரும் பதற, சிறிது நேரத்தில் கொம்பை விட்டுவிட்டு காளையின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள், அவள் கட்டிக் கொண்டதும் கருப்பன், தலையை உயர்த்துவதும் மீண்டும் அவளை தரையிலே விடுவதும் அந்தரத்தில் தூக்குவதும் என்று விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தான்.
இப்போதுதான் போன உசுரு எல்லோருக்கும் வந்தது, ஆகாஷ் அங்கு நடப்பதைப் பார்த்து, "நம்ம கருப்பனா இது," ஒரே ஆச்சரியம், மீராவை ஆகாஷ் மெதுவாபோய் தூக்க,
ஆஆஆஆ னு ஒரு சத்தம் போட்டா பாரு அவ்ளோதான், ஆகாஷ் விட்டுட்டான் குட்டி மீரா கை வலிக்க கருப்பன் கழுத்தை விட்டுவிட்டு, இடுப்பில் கை வைத்து அண்ணாந்து பார்க்க, அவள் நின்ற தோரணை ராஜா போல தோன்றியது, அவ்ளோ கம்பீரம். கண்டிப்பா இவள மிலிட்டரில சேத்து விட்டுடலாம் என்று கூட எண்ணினான் கவின். இவ்ளோ ஆளுமை இதற்கு முன்பு பார்க்க வில்லை, ஆனால் அடுத்த நொடி, அவள் கண் அசைவில் கருப்பன் அமர்ந்தான், கருப்பன் முகத்தைப் பிடித்து கட்டிக்கொண்டு முத்தமிட துவங்கி, அவனுடன் ஒரு மணி நேரம் விளாடி விட்டு பொறுமையா, இவ்ளோ நேரம் கத்திக்கொண்டு இருந்தவர்கள் பக்கம் வந்து.