ஆகாஷ் வாணிய மறக்க எவ்ளோ முயற்சி செஞ்சும் மறக்க முடில.
இவன் சோகம் கண்டு கொண்டது மல்லி மட்டும்தான். தாமரைட சொன்னாலும் நம்பமாட்டானு அவ எதுமே அவட்ட சொல்லலை.
ஆகாஷ் வெளியே போய்ட்டு சோர்வா வந்து உட்காந்து இருந்தான்.
அம்மா வந்து "என்னப்பா ஆச்சி ஒரு மாதிரி இருக்க ".
"அதுலாம் ஒன்னும் இல்ல மா " னு சொல்லி அம்மா மடில தலைவச்சி கண்ணாமூடி படுத்துகிட்டான் .
கொஞ்சநேரம் கழிச்சி யாரோ ஆகாஷ் கால் பிடிச்சி விடவும் , ஆகாஷ் சோர்வா யாருடா இது னு பாத்தா அப்பா .
" அப்பா என்ன பண்றிங்க விடுங்க ,"னு கால் எடுத்துக்க பாத்தான். அவர் பலம் தான் ஊருக்கே தெரியுமே, 50 வயசுலயும் 35 போலத்தான் தெரியும் அவரது தோற்றம், ஆகாஷ்க்கு ஒரு அண்ணா இருந்தா இப்படி தான் இருப்பார் அப்படி இருப்பார் கம்பிரமா.
" என் மகன் நாளு புல்ல கஷ்ட பட்டு வேலை செஞ்சிட்டு வரான், நான் பிடிச்சி விடுறேன் அதை கேக்க நீ யாருடா" என்றார் அவர் செல்ல கோபத்தோடு.
ஆகாஷ் சிரிச்சிட்டே அமைதியா ஆயிட்டான். " உங்களை மாதிரி அப்பா ஊருல இல்ல, இந்த உலகத்துலயே இல்ல பா " என்றான் ஆகாஷ். பொண்ணுங்கலுக்கு கடைசிவரை பெத்தவங்கலுக்கு அவங்க கை குழந்தை ஆனா, பசங்களுக்கு ஒரு வயசுவரை தான் பெத்தவங்க பாசம் கிடைக்கும்,அது பசங்களுக்கு கொஞ்சம் வளர வரைக்கும் தான் இந்த வயசுல கிடைக்கிறதுலாம் வரம் ஆகாஷ் பொறுத்த வரை.
அம்மா மடில படுத்து, அவங்க கை தலையை வருடிவிட , அப்பா கால்பிடிச்சி விட இதமா கண்களை மூடினான் .' எப்படியும் இந்த அப்பா நம்ம சொல்றத கேக்கமாட்டாரு ' னு விட்டுட்டான் ஆகாஷ்.
இதை பாத்துட்டே உள்ள வந்த ரெண்டு இளவரசியும். அப்பா எனக்கும் பிடிச்சி விடுங்க ஒரே வேலைனு மல்லி அப்பாக்கு காலு அடில போய் உட்கார, அப்பாட்ட கையை கொடுக்க, பிடிச்சி விட. ஆகாஷ்க்கு பிடித்து விடுவதை விட்டுவிட்டு, மல்லி கைகளை பிடித்து விட்டார் கண்ணன்.