மை டியர் 2

734 20 18
                                    

பொண்ணு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடானு வாணி அப்பா, ஏற்கனவே  வாணியை பொண்ணு கேட்டு இருந்த இடம் எல்லாம் விசாரிச்சு வீட்டில் இருக்கவங்கள பிடிக்குதா கேட்டுட்டு, அவங்க பக்கத்து ஊர்ல ஆகாஷ் ஓட சித்தி பையன பிக்ஸ் பன்றாங்க.

ரெண்டு பேமிலிக்கும் பிடித்து போயிடுச்சி ரெண்டு மாசத்தில் கல்யாணம்னு சொல்ராங்க.

இத கேள்விப்பட்ட ஆகாஷ் வாணியை தேடிட்டு வரான், ஆனால் அவ பேச ரெடியா இல்ல.

ஒரு வாரமா ஆகாஷ்க்கு டிமிக்கி குடுத்துட்டு ஒளிஞ்சி ஒளிஞ்சி போய்ட்டு இருக்கா, இவன்டலாம் நா எதுக்கு பேசணும்னு அவ்வளவோ ஆத்திரம் அவளுக்கு. ஆகாஷ் க்கு பொண்ணு பாத்துட்டாங்க னு கேள்விப்பட்டதும்.

ஒருநாள் அப்படித்தான் மாவு அரைச்சிட்டு வர மில்லுக்கு போய்ட்டு வந்த வாணி, அவனோடு வண்டியில் வாரமா வேற வண்டில வந்து அவளுக்கு முன்னாடி வேகமா வந்து வண்டியை பிரேக் போட்டு நிறுத்தரான் .

அவன் வண்டி சவுண்ட் வச்சே மேடம் தான் எஸ்கேப் ஆகிடற அதனால், வேற வண்டியில் வந்தான் ஆகாஷ், அதும் சரியா வேலைசெய்தது வாணியும் அதை எதிர் பார்க்கல .

அவன பார்த்ததும் கையில் வச்சி இருந்த மாவு டப்பாவா போட்டுவிட்டு அந்த சைடு இருந்த வயலுக்கு உள்ள ஓடிடற.

ரொம்ப நாள் கழித்து வசமா சிக்கி இருக்க வாணி, ஆகாஷ் விடுவானா அவளை தொரத்திட்டு ஓட்றான்.

" இவன் எதுக்கு என்ன தொரத்திட்டு வாரான், அதான் அவனுக்கு  பொண்ணுப்பாத்துட்டாங்கல, அவ கூட ஓடி பிடித்து விளையாடறது " அவனை திட்டிட்டே கிணற்றுக்கு பக்கத்தில் இருக்க மோட்டர் அறைக்குப் பின்னாடி மறைய.

இவ ஓடிவரத பாத்த மல்லி, "இவள என்ன நாய் எதாவது தூரத்திட்டு வருதா? இப்படி ஓடிவாரா விவஸ்தை கெட்டவ, கிணறு வேற ஆழம், இந்த கழுதைக்கு நீச்சல் வேற தெரியாது, அதும் இவ்ளோ தைரியம் திடீர் னு எங்க இருந்து வந்துச்சி இவளுக்குக் கிணறு பக்கம் போகமாட்டாளே. என்னாச்சி இவளுக்கு " மல்லி அப்பாக்கு சாப்பாடு கொடுத்துட்டு வாணி ஓடரா பக்கம் போறா.

மை டியர் சண்டக்கோழி Where stories live. Discover now