மை டியர்...5

499 18 97
                                    

வாணி ரெடி ஆயிட்டு, வச்சி இருந்தா விஷத்தை எடுத்துட்டு போறா குளியலறைக்கு, களவாணி படம் பார்த்துக் கேட்டுப் போய் இருக்கா...

"ஐயோ இந்த உயிர் இப்படி அல்ப் ஆயிசுல போக போதே" வாணிக்குக் குடிக்கவும் மனசு வரல,

"வாணி இன்னும் என்ன செய்ற சீக்கிரம் வா,கூப்பிட்றங்க உன்ன" னு வெளியே அரமிச்சிட்டாங்க கூப்பிட.

இத விட்ட அந்த கொரங்க கட்டிக்கணுமேனு ரொம்ப நேரம் யோசிச்சிட்டு, ஒருவழியா குடிச்சிட்டா.

ஒரேய முழுங்குல புல் பாட்டில் குடிச்சிட்டு, வெளியே மனமேடைக்கு வரா வாணி. ' இவளுங்க வேற என்ன வெக்க பட வைக்கிறேனென்று காண்ட ஏத்திட்டு வராளுங்க ' சுத்தி இருக்க பொண்ணுங்கள ஒரு முறை முறைக்கவும் எல்லோரும் அமைதியா ஆயிட்டாங்க.

அங்க வாசு, வாணிய வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கிறான். தாலிகட்ட இன்னும் அஞ்சி நிமிஷம்தான் இருக்கு.

' நம்ம வேஷம் சாப்பிட்டு இருக்கக் கூடாது இவனுக்கு வேஷம் வச்சி இருக்கனும், பொண்ணு மனசு புரியாத மிருகம் ' னு வாணி திட்டிட்டே உட்கார வாசு சிரிக்க, வாணி கடுப்பாக.

வாசு அடிக்கடி வாணிய ஒரு மார்க்கமா பாத்து சிரிச்சிட்டே இருக்கான்.

ஆகாஷ் அப்போதான் மண்டபத்துக்கு உள்ள வரான், குடும்பத்தோடுட, அன்னைக்கு எடுத்த சந்தன நிறம் சட்டை, வேட்டியில் வாணியைக் கவர்ந்து இழுக்க. அதை பாத்தா வாணி ' டேய்ய் எப்படி டா உனக்கு மனசு வருது, நம்மள பிடித்து இருக்குனு சொன்ன பொண்ணு கல்யாணத்துக்கு வரத்துக்கு ' மனசுல நல்லா திட்டிட்டு உட்கார்ந்து இருக்கா வாணி.

வாசு வாணி பக்கத்தில் குனிந்து, " கடைசியா பாத்துக்கோ உன் காதலனை, இனி உன்ன பாக்க கூட விட மாட்டேன் வாணி" னு வில்லத்தனமா சிரிக்க,

' அடச்சை இந்த வீனா போனவன் பேசறதை எல்லாம் கேக்கணும் னு எனக்கு தலை எழுத்து , இந்த மருந்து கலப்படம் போல, ச்சை இந்த விவஸ்தை கேட்ட விஷத்துக்குக் கூட நமக்குச் சாதகமா இல்லனு வாணி காண்டு ஆகிட்டா.

மை டியர் சண்டக்கோழி Where stories live. Discover now