20
எங்கேஜ்மெண்ட் வந்ததும் துவங்கும் என்று நினைத்த கிருஷ்ணாக்கு கண்ணனுக்கு ஒரே அதிர்ச்சி, ரொம்ப வருஷம் கழிச்சி நடக்கும் சுப நிகழ்ச்சி இப்படி ஆகிடுச்சுனு ஆகாஷ் வீட்ல இருக்கவங்களுக்கு சோகம்....
அர்ஜுன் என்ன ஆச்சினு விசாரிக்கத்தான் தெரிந்தது 2 பொண்ணும் ஒரே பையன மனசுல நினைச்சி இருக்காங்கனு.....
கண்ணன் உடனே "அயோ மல்லி என்னாச்சி" நீ சந்தோஷ காதலிக்கிறயா!!!! எப்போ இருந்து என்று கண்ணன் பதற.
அவரு ஊருக்கு வந்த அப்போ பாத்தத்துல இருந்து என்று சொல்ல கண்ணனுக்கு அப்போதான் நிம்மதி, கண்ணைத் துறக்கும் முன்பு ....
ரித்திகா சாரா ஒன்றாக சேர்ந்து, உங்க பொண்ணு பண்ண தப்புக்கு குடும்பத்தோட நாங்க தான் தலை குனிஞ்சி நிக்கிறோம்,
"இப்போ என்னதான் சொல்ல வரீங்க, எங்க பொண்ணு மனசை கலைச்சது நீங்கதான்".
மாமியா இப்போவே இவ்ளோ திமிரா இருக்கா பொண்ண கட்டிகுடுக்களதுக்கு முன்னாடியே தெரிஞ்சிது சரியான ராங்கி காரிங்க" என்று மல்லி எகிற... கண்ணன் கிருஷ்ணாவை பார்க்க, அவன் கொலை வெறியோடு நின்றுகொண்டு இருந்தான்...
கண்ணன்தானே இவ்ளோ நடக்க முழு பொறுப்பு சிறப்பாக வைத்து செஞ்சதுக்கு முழு காரணம்.... கிருஷ்ணா கண்ணனை முறைக்கும் நொடி, கண்ணன் நைசாக நழுவ பார்த்தான்,
அதை பாத்துட்டு மல்லி, "நில்லுங்க கிருஷ்ணா எங்க போறீங்க, அக்காவை பாக்க வந்துட்டு என்ட எதுக்கு இப்படி நடந்துகிட்டீங்க, உங்களுக்கே இது தப்பா தெரிலயா, நீங்க என்ட சீண்டி விளாடி, ஆசைய வளத்தது யார் தப்பு என்று கண்ணனை பார்த்து கிருஷ்ணானு கூப்பிட்றத மொத்த குடும்பமும் முழிக்க,
'என்ன இவ கண்ணனை பார்த்து, கிருஷ்ணானு சொல்றா',
தாரா குழந்தை அழுறா, சமாதானம் படுத்திட்டே தாரா அங்க நடக்கும் கலவரத்தை பார்த்து இருக்க,
தாரா குழந்தைக்கு அர்ஜுன் அம்மா பேர் வச்சிட்டான் குட்டி மீரா,
பக்கத்தில் இருந்த கிருஷ்ணா, "கிருஷ்ணா மாமா தூக்கு தூக்கு" என்று சத்தம் கேட்ட திசையை மல்லி அதிர்ச்சில பார்க்க.
