மூணுப்பெரும் இவள ஒரு பொருளாக்கூட கண்டுக்கல, வாணிக்கு இந்த உதாசீனம் சின்ன வயசுல இருந்தே பிடிக்கல அதும் ஆகாஷ் பண்றது இன்னும் வலிச்சது வாணிக்கு.
' நீ செஞ்ச காரியம் அப்படி வாணி ' என்றது அவளின் ஒரு மனம்.
மறு மனமோ நீ அப்படி என்ன செஞ்ச வாணி, காதல் சொன்ன போது, ஏற்கால, வேற கல்யாணம் செஞ்சிக்க பாத்தான், இப்போ வேற ஒருத்தன் பொண்டாட்டி ஆயிட்டா அண்ணனுக்கு, தங்கச்சிக்கும் சீண்டி விளையாட ஆளு இல்லை ' என்று அவள் மனதை மாற்ற முயன்றது.
வாணி கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்தவள், மூவரும் ஒரு வார்த்தை கூட பேசாதது, மனதில் முள் தேய்க்க. ஆகாஷ் ரூம்க்கு போய்ட்டா.
கொஞ்ச மணி நேரம் கழித்து ஆகாஷ் வர, அழுது கொண்டு இருந்தவள் சட்டென்று கண்களை துடைத்து உட்கார்ந்து இருக்க.
அவளை உத்து பார்த்தவன் நெருங்கி வந்து " என்ன பேரஃஓர்மன்ஸ் செய்ய ஸ்டார்ட் செஞ்சிட்டாயா, இதல்லாம் நம்ப நான் ஒன்னும் முட்டாள் இல்லை " என்று ஆகாஷ் அவளது கண்ணீரை ரசித்துக்கொண்டு, கண்ணீரை சுண்டி விட .
ஆமா டா நடிக்கிறேன், உன்ன எப்படி மயக்கலாம் னு பிளான் செஞ்சிட்டு இருக்கேன் போதுமா " என்று கண்ணீரை துடைத்துக்கொண்டு.
"Mr.ஆகாஷ் என்னோட ஈகோவ டச் செஞ்சிட்டா, நீயா நானா பாத்துக்கலாம் டா '' என்று வீரவசனம் பேசிவிட்டு வேகமாக வெளியே போய் மயில் க்கு உதவிசேஞ்சிட்டு இருக்க, ' அப்படியே மல்லிய வம்பு இழுக்கனுமே என்ன செய்லாம் ' னு யோசிச்சிட்டு இருந்தார்.
வாணி தானா போய் "ஏன் தாமரை நீயும் நானும் ஒரே கலர் டிரஸ் போட்டு இருக்கோம் ல, வா ஒரு போட்டோ எடுத்துக்கலாம்" என்றாள்.
வாணி சரி என்று அவளது நீண்ட முடியை தூக்கி முன்னாடி போடா, தாமரை மல்லி இடம் போனை கொடுத்து, போட்டோ எடுக்க சொல்ல. மல்லிக்கு வயிறு ஏரியாத குறைத்தான். போட்டோ எடுத்து முடித்ததும் இருவரும் பார்த்துட்டு, ஒன்னு கூட சரி இல்லை னு சொல்லி திரும்ப திரும்ப மல்லியை போட்டோ எடுக்க வைத்தாள். மல்லி கடுப்பாகு" இனி எடுக்க முடியாது" சொல்லி போனை வைத்து விட்டாள்.
