17 மை டியர்

227 12 4
                                    


கட்டிக்கொடு டான்னு உரிமையா கேக்கறத விட்டுட்டு தயங்கி கேட்கற, “நானாடா அவன வளத்தேன் மொத்த குழந்தைகளும், எங்ககூட இருந்ததா, மாமா அத்தைனு இந்த வீட்லதானேடா வளந்தாங்க. தூங்க கூட மேல வரது இல்ல, இப்படி இருக்க நீ இப்படி கேட்டது சரியா” என்று ஆனந்தன் கோபமாக பேச.

காவியா, கவிதா, கிருஷ்ணா கண்ணன்... ஆளுக்கு ஒரு பிலேட் ஸ்னாக்ஸ் ஜூஸ் கொண்டு வந்து ஆனந்தன் முன்னாடி நீட்ட.

“என்ன உங்க நாளு பேருக்கும், திமிரா” என்று ஆனந்தன் முறைக்க.

“மொத முறையா மூச்சி விடாமல் எங்க கூட பேசி இருக்கீங்க அதுக்கு” என்று நாளு குட்டி வாண்டுகள் கலாய்க்க, குடும்பமே சிரித்தது.

அர்ஜுன் உடனே “என்ன மாமா உனக்கு வசதிதான செஞ்சி கொடுத்து இருக்கோம், ஆமாதான செல்வி என்று சீண்ட செல்வி வேகத்தில் ஆனந்தன் பின்னாடி ஒளிஞ்சிகிட்டா. சிறிது நேரம் கழித்து, கவினுக்கு செல்வி விருப்பம் ரொம்ப முக்கியம்.

செல்வி தயக்கமா கவினை பார்க்க, கவின் கண்களை சிமிட்டி சம்மதம் சொல்ல. இந்த அம்மா பையனின் மௌன பாஷை மெய்சிலிர்க்க வைத்தது.

அர்ஜுன் கவினை பார்த்து “உனக்கு பிடிச்சா மட்டும் சொல்லு கவின் இது வாழ்கை வற்புறுத்தி வர கூடாது”.

“எனக்கு ஓகே தான் மாமா தாராக்கு ஓகேவானு கேளுங்க“.

தாரா மீராவை பார்த்துக்கொண்டே ஓகே சொல்ல.

ஒரு மாதத்தில் கல்யாணம் என்று பேசி முடிக்க. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் பம்பரமாக சுழன்று வேலை செய்துகொண்டு இருந்தார்கள்.

4 குட்டிஸ்கும் செம ஹாப்பி. கிருஷ்ணா கண்ணன் கவிதா காவியா... கல்யாணத்துக்கு என்ன என்ன செயினும்னு லிஸ்ட் போட்டு கொண்டு இருந்தார்கள்.

தாரா, கவின் மனதில் சிறு குழப்பம் இருந்துகொண்டே இருந்தது.

திருமணத்த முடிந்த அளவுக்கு எளிமையாக செய்ய திட்டமிட்டார்கள். முடிந்தால் தானே இந்த நான்கு வண்டுகளும் சேர்த்து வச்சி செய்துவிட்டார்கள், அதுபடி நடக்கனும், இதுபடி நடக்கனும்னு எல்லா படியும் சிறப்பா செஞ்சிவிட்டார்கள்.

மை டியர் சண்டக்கோழி Where stories live. Discover now